ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பீட்டாவை மட்டுமல்ல - அதற்கு முட்டுக் கொடுக்கும் இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் !

பீட்டாவை மட்டுமல்ல - அதற்கு முட்டுக் கொடுக்கும் இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் !
இன்றைக்கு சல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க பீட்டா என்ற ஒற்றைத் தனியார் தொண்டு நிறுவனம் மட்டுமே காரணம் என்ற செய்தி பெரிய அளவில் பரப்பப்பட்டு வருகின்றது.

அதிலும், பீட்டா போன்ற தனியார் தொண்டு நிறுவனத்தை, “கிறித்துவ” தொண்டு நிறுவனம் போல் சித்தரித்து, அந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டுமென இந்திய அரசை ஆளும் பா.ச.க.வின் தமிழ்நாட்டுத் தலைவர்கள் பொன். இராதாகிருட்டிணன், தமிழிசை, எச். இராசா போன்றோர் முயல்கின்றனர்.

பீட்டா - கிறித்துவ தொண்டு நிறுவனம் அல்ல. ஆரியப் பார்ப்பனர்கள் உறுப்பு வகிக்கும் அமெரிக்கத் தொண்டு நிறுவனம்!

மேலும், இந்த அமைப்பு மட்டுமே சல்லிக்கட்டைத் தடை செய்யவில்லை. இந்திய அரசின் விலங்குகள் நல வாரியமும் இணைந்துதான் இந்தத் தடையை செய்திருக்கின்றன.
காங்கிரசுக் கட்சியின் செய்ராம் ரமேசு உள்ளிட்டோர், பா.ச.க.வின் மேனகா காந்தி, சுப்பிரமணிய சாமி உள்ளிட்டோர் மட்டுமின்றி, அரசியல் வெளிக்கு அப்பால் செயல்படும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் உள்ளிட்ட வடநாட்டவர்களால் தமிழர்களின் பண்பாட்டை ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாது என்பதற்கு, சல்லிக்கட்டுத் தடை ஒரு எடுத்துக்காட்டு!

இந்த வடநாட்டவர்கள் அனைவரும் இணைந்துதான் அவர்களின் அரசான இந்திய அரசின் மூலம் இதைச் செய்துள்ளனர்.

எனவே, “பீட்டாவை தடை செய்!” என்று மட்டும் முழங்கி, இந்திய அரசைக் காப்பாற்றும் சதியில் இளைஞர்களும் மாணவர்களும் பலியாகிவிட வேண்டாம்!
 
தமிழ்நாட்டு இளைஞர்களே, மாணவர்களே!

தொடர்ந்து தமிழர்களை - தமிழ்ப் பண்பாட்டை அழிக்கத்துடிக்கும் இந்திய அரசைப் புறக்கணிக்கும் போராட்டத்தை முன்னெடுங்கள்!

இந்திய அரசைப் புறக்கணிப்போம்!

#TamilsBoycottGovtOfIndia

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/TamilsBoycottGovtOfIndia

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.