பீட்டா மட்டும்தான் காரணமா? காங்கிரசு - பி.ஜே.பி. யோக்கியமா?
பீட்டா மட்டும்தான் காரணமா? காங்கிரசு - பி.ஜே.பி. யோக்கியமா?
தமிழர்களின் வீர விளையாட்டான ஏறு தழுவல் மீதான தடைக்கு பீட்டா என்ற அமெரிக்கத் தனியார் தொண்டு நிறுவனம் மட்டுமே காரணம் என்பதுபோல் பலரும் பேசிக் கொண்டுள்ளனர்.
போராட்டக் களத்திலும் “பீட்டா ஒழிக!” என்ற முழக்கம் மட்டுமே திட்டமிட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால், உண்மை என்ன?
2011ஆம் ஆண்டு காளையை காட்சிப்படுத்தும் விலங்குகளின் பட்டியலில் முதன் முதலில் சேர்த்தது, அப்போது இந்தியாவை ஆண்ட காங்கிரசு - தி.மு.க. கூட்டணி அரசு!
இதன் காரணமாகவே, சல்லிக்கட்டுக்கு முதற்பெரும் தடை ஏற்பட்டது!
அதன் பின்னர், ஆட்சிக்கு வந்த பா.ச.க. காளையை அப்பட்டியலிலிருந்து நீக்காமல் பசப்பி வருகிறது. 2016ஆம் ஆண்டு சனவரியில்கூட, காளையை அப்பட்டியலில் வைத்துக் கொண்டே “சல்லிக்கட்டுக்கு” மட்டும் விதிவிலக்கு அளிப்பதாகக்கூறி, உச்ச நீதிமன்றத்தில் தடை செய்வதற்கு ஏதுவான ஒரு திருத்தத்தைச் செய்தது.
அந்தத் திருத்தத்திற்கு தடை வாங்கியது, பீட்டா அமைப்பு. அந்த பீட்டா அமைப்பிற்கு அனைத்து ஆதாரங்களையும் கொடுப்பது, இந்திய அரசின் “விலங்குகள் நல வாரியம்” என்ற அமைப்பு.
நம்முடைய வரிப்பணத்தால் இயங்கும் அரசு நிறுவனமான “விலங்குகள் நல வாரியம்”தான், சல்லிக்கட்டுத் தடைக்கு பீட்டா வாதிட - அவர்களுக்கு ஆவணங்களை வழங்கும் வேலையை செய்கிறது.
இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டு, பீட்டாவை மட்டும் காரணமாகக் காட்டிவிட்டு, காங்கிரசும் பா.ச.க.வும் யோக்கியர்கள் போல் தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றன. இதனை நாம் விடக்கூடாது!
பீட்டாவை மட்டுமல்ல, காங்கிரசு - பா.ச.க. வடநாட்டுக் கட்சிகளை - தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும்!
#TamilsBoycottGovtOfIndia
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/TamilsBoycottGovtOfIndia
முகநூல்: www.fb.com/TamilsBoycottGovtOfIndia
Leave a Comment