இராயக்கோட்டையில் எழுச்சியுடன் நடந்த “இயற்கை வேளாண் அறிவியலாளர்”அய்யா.கோ.நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் ..!

இயற்கை வேளாண் அறிவியலாளரும், பசுமைப் போராளியுமான அய்யா கோ. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, கிருட்டிணகிரி மாவட்டம் இராயக்கோட்டையில், 30.12.2016 மாலை எழுச்சியுடன் நடைபெற்றது.
தமிழக உழவர் முன்னணி மற்றும் இளைய தலைமுறை அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வின் தொடக்கத்தில், இராயக்கோட்டை அண்ணா சிலையிலிருந்து கிருட்டிணகிரி சாலை வழியாக இ.சி.ஐ. பள்ளி வரை, இராயக்கோட்டை “இளமை துள்ளும் இசைகுழு”வின் பறை இசையுடன் மாணவர்கள், குழந்தைகள், பெண்கள், உழவர்கள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்புடன் எழுச்சிப் பேரணி நடைபெற்றது. பேரணியை தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவன் குழு உறுப்பினர் பாவலர் ப. செம்பருதி தொடங்கி வைத்தார்.
பின்னர், அய்யா நம்மாழ்வார் அவர்களின் திருவுருவப் படம் திறந்து வைக்கப்பட்டு, மாணவர்களுக்கு பரிசளிப்பும், சிறு தானியக் கண்காட்சியும் நடைபெற்றது. நிகழ்வுக்கு, தமிழக உழவர் முன்னணிப் பொதுச்செயலாளர் திரு. து. தூருவாசன் தலைமையேற்றார். ஆற்காட் தொண்டு நிறுவன நிதி மேலாளர் திரு. த. சிவமூர்த்தி தொடக்கவுரையாற்றினார். முன்னதாக, இளைய தலைமுறை இராயக்கோட்டை அமைப்பாளர் திரு. பாலகிருட்டிணன் வரவேற்புறையாற்றினார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் திரு. இரத்தினகுமார், இளைய தலைமுறை தோழர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புலவர் கவியருவி திரு. நாகராசன், தென் பெண்ணைக் கிளைவாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு ஆலோசகர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து ஆகியோர் கருத்துரையாற்றினர். பாவலர் வாழும் வையம்பட்டியார் அவர்கள் எழுச்சிப் பாடல்களைப் பாடினார்.
நிறைவில், தமிழக உழவர் முன்னணி தலைமை ஆலோசகரும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளருமான தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இளைய தலைமுறை தோழர் திரு. வடிவேல் சிவா நன்றியுரையாற்றினார்.

அய்யா கோ. நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் வணக்கம்!
செய்தித் தொடர்பகம்,
தமிழக உழவர் முன்னணி
தமிழக உழவர் முன்னணி
பேச: 94432 91201, 76670 77075
https://www.facebook.com/uzhavarmunnani?fref=ts
http://tamilfarmer.blogspot.in/

Leave a Comment