ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தஞ்சையில் இரவு பகலாக நடைபெற்று வரும் காவிரித்தாய்க் காப்பு முற்றுகை அறப்போராட்டம்! “போராட்டத்தைக் கைவிட முடியாது” போராட்டக் குழுவினர்

தஞ்சையில் இரவு பகலாக நடைபெற்று வரும் காவிரித்தாய்க் காப்பு முற்றுகை அறப்போராட்டம்! “போராட்டத்தைக் கைவிட முடியாது” என்று போராட்டக் குழுவினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
#SaveMotherCauvery
தஞ்சையில் இரவு பகலாக நடைபெற்று வரும் தொடர் அறப்போராட்டம்“போராட்டத்தைக் கைவிட முடியாது” என்று போராட்டக் குழுவினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
பல்லாண்டு காலம் போராடிப் பெற்ற காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைக்கவுள்ள இந்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கக் கோரியும், செயல்படாத தமிழ்நாடு அரசு - ஆக்கப்பூர்வ செயல்பாட்டுக்கு முன் வர வேண்டுமெனக் கோரியும், மூன்றாவது நாளாக தஞ்சையில் - காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தொடர் அறப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை - திருச்சி நெடுஞ்சாலையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில், கடும் வெயிலிலும் குளிரிலும் நெடுஞ்சாலையோரம் ஒரு தற்காலிகக் கொட்டகை அமைத்து, ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் பெரியவர்களும் குவிந்துள்ளனர்.
காவிரித்தாயைக் காக்கக் கோரும், இப்போராட்டத்தில் அடுத்தத் தலைமுறையினரும் கைகோத்து இறங்கியுள்ளனர்.
களத்திற்கு வர முடியாத நண்பர்கள், குறைந்தபட்சம் #SaveMotherCauvery என்ற குறிச்சொல்லை (HashTag) பயன்படுத்தி, போராட்டச் செய்திகளையும், போராட்டக் கோரிக்கையை ஆதரித்தும் அவரவர் முகநூலில் பதிவுகள் எழுத வேண்டுகிறோம்.
நண்பர்களே இணைவோம்!

காவிரித்தாயைக் காப்போம்!

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.