மேக்கேத்தாட்டுஅணைத் திட்ட அறிக்கைதயாரிக்கதடையில்லை என்ற உச்ச நீதிமன்றத்தீர்ப்பு நகலைஎரித்து - தஞ்சையில் காவிரி உரிமைமீட்புக்குழுவினர் எழுச்சியுடன் போராட்டம்!
மேக்கேத்தாட்டு அணைத் திட்ட அறிக்கை
தயாரிக்க தடையில்லை என்ற உச்ச நீதிமன்றத்
தீர்ப்பு நகலை எரித்து - தஞ்சையில் காவிரி உரிமை
மீட்புக் குழுவினர் எழுச்சியுடன் போராட்டம்!
தமிழ்நாட்டுக்கு வெள்ளக் காலத்தில் வரும் நீரைக் கூட தரக் கூடாது என்ற நோக்கில் கர்நாடகம் மேற்கொள்ளும் மேக்கேத்தாட்டு அணைக்கான முழுமையான திட்ட அறிக்கையைத் தயாரிக்கத் தடையில்லை என கடந்த 13.11.2025 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அத்தீர்ப்பின் நகலை எரித்து, தஞ்சையில் இன்று (17.11.2025) காலை - காவிரி உரிமை மீட்புக் குழுவினர் எழுச்சியுடன் நடத்திய போராட்டத்தில் 150க்கும் மேற்பட்ட உழவர்களும், உணர்வாளர்களும் பங்கேற்றனர். 50 பேரைக் காவல்துறை கைது செய்தனர்.
தஞ்சையிலுள்ள இந்தியத் தலைமை அஞ்சலகம் முன்பு இன்று (நவம்பர் 17) காலை, காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் திரு. த. மணிமொழியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. க. செகதீசன், தமிழர் தேசியக் களம் அமைப்பாளர் திரு. ஆரூர் ச. கலைசெல்வம், தோழர் இரா. மன்னை இராசசேகரன், காவிரி உரிமை மீட்புக் குழு செயற்குழு தோழர் வெள்ளாம்பெரம்பூர் துரை. இரமேசு, பொறியாளர் செந்தில்வேலன், அள்ளூர் சாமி. கரிகாலன், வள்ளலார் பணியக ஒருங்கிணைப்பாளர் ஐயா சுந்தரராசன், த.தே.பே. தலைமைச் செயற்குழு தோழர்கள் பழ. இராசேந்திரன், க. விடுதலைச்சுடர், பி. தென்னவன், வே.க. இலக்குவன், தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, இரா.சு. முனியாண்டி, பொதுக்குழு தோழர் க. தீந்தமிழன், குடந்தை செழியன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், உழவர்களும் பங்கேற்று, தீர்ப்பு நகலை முழக்கங்களுடன் கொளுத்தினர்.
காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், 50க்கும் மேற்பட்ட தோழர்களைக் காவல்துறை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது.
========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
==========================
Leave a Comment