தஞ்சையில் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம், அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல் சின்னம்
தஞ்சையில் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம், அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல் சின்னம்
தஞ்சையில் ‘சாந்தப்பிள்ளை கேட்’ எனப்படும் தொடர்வண்டிப் பாதை மீது புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. தென்னகத் தொடர்வண்டித் துறையும், தமிழ்நாடு அரசும் ஆளுக்கு 50 விழுக்காடு பங்கோடு, 42 கோடி ரூபாயில் நாகை சாலையில் (கிழக்கு) வண்டிக்காரத் தெரு, திருச்சி சாலையில் (மேற்கு) மேரிஸ் கார்னரை அடுத்த அனு மருத்துவ மனை வரை சற்றொப்ப ஒரு கிலோ மீட்டர் நீளம் கொண்ட பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தி.மு.க. ஆட்சியில் முன்மொழியப்பட்ட இத் திட்டம் பல்வேறு தன்னல ஆற்றல்களின் அழுத்தத் தால் கிடப்பில் போடப்பட்டது.
2011இல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின், ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு, பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. 2012இல் சாந்தப்பிள்ளை கேட் _- தொடர்வண்டிப் பகுதிக்கு மேல் உள்ள பாலத்தை தொடர்வண்டித்துறை நிர்வாகம் ஓராண்டிற்குள் கட்டி முடித்தது. தமிழ்நாடு அரசு சார்பில் செய்ய வேண்டிய இரு பக்க சாய்வுப் பணிகள் காலதாமதமாகத் தொடங்கின.
வண்டிக்காரத் தெரு (கிழக்கு) பகுதியில் பாலத்தின் நீளத்திற்கு ஏற்ப சரிவு அமைக்கப்பட்டுள்ளது. வண்டிக்காரத் தெரு நான்கு சாலை சந்திப்பில் பாதை இல்லாத நிலையில், பகுதி மக்கள் போராடி சிறிய குகைப் பாதை அமைக்கப்பட்டது. இந்தப் பகுதி மிகவும் குறுகலாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது.
திருச்சி சாலை (மேற்கு) பகுதியில் பாலத்தின் நீளம் தன்னலக்காரர்களின் அதிகாரத் தலையீட்டால் குறைக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாஞ்சிக் கோட்டை சாலை வந்து சேரும் இடத்தில் பாலம் முடிவடைகிறது. நாஞ்சிக்கோட்டை சாலையிலிருந்து வரும் வண்டிகள் -_ மேம்பாலத்திலிருந்து வேகமாக இறங்கிவரும் வண்டிகளுடன் மோதிக் கொள்ளும் நிலை இப்போதுள்ளது.
நாஞ்சிக்கோட்டை சாலை என்பது பள்ளிகள், அரசு அலுவலகங்கள், திருமண மண்டபங்கள் நிறைந்த பகுதி. கல்லுக்குளம் முதல் கருணாநிதி நகர் வரை உள்ள பல்வேறு பகுதி நகர மக்களும், நாஞ்சிக் கோட்டை முதல் குருங்குளம் வரை உள்ள பல்வேறு கிராமப்புற மக்களும் பயன்படுத்தும் நெரிசல் மிகுந்த சாலையாகும். இது மக்களின் கனவுப் பாலமல்ல _- மக்கள் உயிரைக் குடிக்கும் மரணப்பாலம் என்று மக்கள் புலம்புகின்றனர்.
குறைபாடுகள் இல்லாத பழைய வரைபடத்தை மாற்றியது யார்? புதிய வரைபடத்தை முன்மொழிந்தது யார்? பாலத்தின் நீளத்தைக் குறைத்தும்கூட, ஏன் கூடுதல் பணம் செலவழிக்கப்பட்டது? இவ்வாறு அடுக்கடுக்காக வரும் கேள்விகளுக்கு சரியான பதிலை ஆட்சியாளர்களோ அல்லது அதிகாரிகளோ தர வில்லை.
இந்நிலையில், 07.11.2017 அன்று வண்டிக்காரத் தெரு பகுதியில் பாலத்தில் 100 மீட்டர் அளவுக்கு விரிசல் ஏற்பட்டது. பக்க வாட்டி லும் விரிசல் ஏற் பட்டது. இது ஊடகங்களில் செய்தி யாக வெளிவந்தது.
உ́னே நெடுஞ்சாலைத் துறையினர் தார்̀சி விரிசலைப் ̀சி மெழுகினர். đ£லத்திற்கு முதல் உதவி செய்கிறோம் என்று நெடுஞ்சாலைத்துறை ஊழி̣ர்கள் Ăறினர். மனிதர்களுக்குத்தான் முதலுதவி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், எடப்பாடியார் ஆட்சியில் பாலத்துக்கே முதலுதவி என்கிறார்கள். செல்லூர் ராஜூ போன்றவர்கள் நெடுஞ்சாலைத் துறையிலும் இருக்கிறார்கள் போலும்!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 29.11.2017 அன்று தஞ்சையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேரத்தில், இந்த மேம்பாலத்தை திறப்பதாக அறிவிக்கப் பட்டது. ஆனால் மக்களின் எதிர்ப்புப் போராட் டத்தால் திறப்பு விழா தற்போது தள்ளிவைக்கப்பட் டுள்ளது.
எடப்பாடியார் பொறுப்பில்தான் நெடுஞ்சாலைத் துறை உள்ளது. இந்த மரணப் பாலத்தைக் கட்டுவதில் நடைபெற்ற ஊழல் குறித்து இந்திய அரசின் குற்றப் புலனாய்வுத்துறை விசாரணை நடத்த வேண்டும்.
குற்ற வாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். பழைய வரைபடத்தின்படி பாலத்தைக் கட்டி முடிக்க வேண்டும். அதுவரை இந்த பாலத்தைத் திறக்கக்கூடாது. ஊழல் செய்தவர்களிடமிருந்து புதிய பாலம் கட்டு வதற்கான பணத்தை வசூலிக்க வேண்டும்.
இக்கோரிக்கைகளுக்காக மக்களை ஒன்றுதிரட்டும் வகையில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரா.சு. முனியாண்டி அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு, “மேரீஸ்கார்னர் மேம்பாலம் பயன்பாட்டு சீரமைப்புக் குழு” என்ற போராட்டக் குழு அமைக்கப் பட்டது.
கட்சி சார்பற்ற முறையில், அனைத்துக் கட்சியி னரையும், பொது மக்களையும் இணைத்துக் கொண்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. கடந்த 09.10.2017 அன்று அனைத்துக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தை இக்குழு நடத்தியது. பொறியா ளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களைக் கொண்டு, மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தவும் இக்குழு முடிவெடுத்துள்ளது.
14.11.2017 அன்று தஞ்சையில் நடைபெற்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில், மேம்பாலத்தில் நடந்துள்ள ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
மக்கள் பயணிக்கத்தான் மேம்பாலமே தவிர மக்கள் மரணிக்க அல்ல என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
மக்களின் கனவுப் பாலத்தை மரணப் பாலமாக மாற்ற விடாமல் தடுக்க வேண்டியது எதிர்காலத் தலைமுறைக்கு நாம் செய்ய வேண்டிய மிக முகாமையான கடமையாகும்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Leave a Comment