ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பொங்கல் திருவிழா உலகப் பெருவிழா - ஐவர் வழி வ. வேம்பையன்

பொங்கல் திருவிழா உலகப் பெருவிழா - ஐவர் வழி வ. வேம்பையன், தலைவர், திருவள்ளுவர் மன்றம், மறைமலை நகர்.
தமிழர் திருநாள் என்பது - தமிழ், உழவு, உழைப்பு, உறவு, நட்பு, நன்றி, மழை, ஞாயிறு, மாடு, மக்கள் ஆகிழவற்றின், சீறும் சிறப்பும் பரப்புரையும் பிலமும் பயனும் பற்றிப் பேசுவதும் வாழாக் கொண்டாடுவதும் ஆகும்!
 
பொங்கல் விழா சங்க இலக்கியங்களில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்கள் சாதி, மதம், கட்சி, நாடு கடந்து கொண்டாடுகிறார்கள். அதனால் அது "தமிழர் விழா" என்று அழைக்கப்படுகிறது!
 
பொது விழா
 
உழவுத்தொழில் நாட்டில் நடைமுறைக்கு வந்தது முதல் பொங்கல் விழா மார்கழி மாதம் இறுதிநாள் முதல் தை மாதம் ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை போகி, பெரும்பொங்கல், மாட்டுப் பொங்கல், கன்னிப் பொங்கல் அல்லது ஒருவரை ஒருவர் காணும் நாள் என்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்பொழுது மார்கழி இறுதி நாள் போகி நாள் என்றும், தை முதல் நாள் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நாள் என்றும், தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாள் என்றும் தை மூன்றாம் நாள் உழவர் நாள் என்றும் கொண்டாடப்படுகிறது. தூய்மை உழவு, தொழில், நன்றி, ஞாயிறு போற்றல் ஆகியவை சாதி, மதம், மொழி, நாடு கடந்து பன்பற்றப்படுகிறது.
 
திருவள்ளுவர் ஆண்டு
 
தை முதல் நாள் பெரும்பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு என்று பின்பற்றப்படுகிறது. திருவள்ளுவர் ஊழி கி.மு. 31 என்றும் ஆங்கில ஆண்டுடன் 31 கூட்டினால் வருவது 2018 + 31 = 2049 திருவள்ளுவர் ஆண்டு என்றும் கணக்கிடப்படுகிறது. திருவள்ளுவர் ஆண்டின் முதல் மாதம் தை இறுதி மாதம் மார்கழி, தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு (திருவள்ளுவர் ஆண்டு) தொடங்குகிறது.
 
உலகெங்கும் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் கணிசமான எண்ணிக்கையில் வாழும் தமிழர்கள் பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இவ்விதம் உலகம் முழுவதும் 77 நாடுகளில் வாழும் 13 கோடித் தமிழர்கள் பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
 
மேற்றிசை நாடுகளில் இது அறுவடை திருவிழா என்று அழைக்கப்படுகிறது. அமேரிக்க ஐக்கிய நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நான்காம் வியாழக்கிழமை அறுவடை விழா என்று கொண்டாடப்படுகிறது. இது நன்றி அறிவிப்பு விழா என்று அழைக்கப்படுகிறது.
 
1987 நவம்பரில் மலேசியாவில் நடந்த ஆறாவது உலகத் தமிழ் மாநாட்டில், சப்பான் மொழிப் பேராசிரியர்  டாக்டர் ஒஹ்னோ சப்பானிலும், அறுவடை விழா ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதம் பதினைந்தாம் நாள் "கோஷோ கட்சு" என்று தமிழ்நாட்டின் பொங்கல் விழாப் போல கொண்டாடப்படுகிறது என்று சொன்னார்.
 
உலகம் முழுவதும் 13 கோடிக்கும் மேல் வாழ்கின்ற தமிழ் மக்களால், மதம் - அரசியல் சார்பு இல்லாமல் பண்பாட்டு அடிப்படையில் கொண்டாடப்படுகிற ஒரே விழா - பொங்கல் விழா மட்டுமே! அது உலகத் தகுதியைப் பெற்று வடுகிறது.
 
1971ஆம் ஆண்டு (09.05.1971), 49 தமிழ் ஆறிஞர்களும் புலவர்களும் சான்றோர்களும் முனைவர்களும் கொண்ட தமிழகப் புலவர் குழு திருச்சியில் நடந்த 30ஆம் கூட்டத்தில் பொங்கல் பெருநாள் ஒரு கிழமை விழாவாகக் கொண்டாடல் வெண்டும் என்று முடிவு செய்து, தமிழ்நாடு அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் வேண்டுகோள் விட்டது.
 
இவ்வாறே பாவேந்தர் கூற்றுப்படி - "தமிழர் திருநாள் கொண்டாடுவோம் - நாளும் தமிழ் வளர்த்து உலஙப்புகழ் சூட்டுவோம்!"
 
(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழர் கண்ணோட்டம் மாதமிருமுறை இதழின் 2018 சனவரி 16-31 இதழில் வெளியான கட்டுரை இது).
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.