ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

புதுச்சேரி பாகூரில் நாளை (மார்ச் 23) காவிரி உரிமை மீட்புக்குழு போராட்டம்!

புதுச்சேரி பாகூரில் நாளை (மார்ச் 23) காவிரி உரிமை மீட்புக்குழு போராட்டம்!

காவிரி உரிமைப் பறிப்பைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், புதுச்சேரியில் ஐட்ரோகார்பன் எடுப்புத் திட்டங்களை நிறைவேற்றக் கூடாதென்றும் நாளை (23.03.2018) புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

புதுச்சேரி மாநிலத்தில், ஐட்ரோகார்பன் திட்டம் நிறைவேற்றப்படவுள்ள பாகூரில், மாதா கோவில் அருகில் நாளை (23.03.2018) காலை 9 மணி முதல் நடைபெறவுள்ள இத்தொடர் முழக்கப் போராட்டத்திற்கு பாகூர் நீராதார மேலாண்மைக் குழுத் தலைவர் திரு. இரா. பாவாடை தலைமை தாங்குகிறார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம், நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழர் தேசிய முன்னணி, உலகத் தமிழ்க் கழகம், தமிழ் தமிழர் இயக்கம், தை நிமிர்வு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், பாகூர் பொது மக்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைப்பு விடுக்கின்றோம்!

தொடர்புக்கு - 9345495214

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.