ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழர் மறுமலர்ச்சியின் மூலவர் , சீர்திருத்த முன்னோடி, வள்ளலார் அவர்களின் 200 வது ஆண்டு பிறந்த நாள் விழா

 தஞ்சையில் தமிழர் மறுமலர்ச்சியின்  மூலவர் , சீர்திருத்த முன்னோடி, வள்ளலார் அவர்களின் 200 வது ஆண்டு பிறந்த நாள் விழா ==================================================                                      

தஞ்சை மாநகரம் கலைஞர் நகர் பகுதியில் இன்று(05.10.2022) காலை 10 மணிக்கு வள்ளலார் பணியகத்தின் சார்பில் மிக சிறப்பாக பிறந்த நாள் விழா நடைபெற்றது.   திருவாளர் நா.வைகறை தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வள்ளலார் பணியகத்தின் திருவாளர்கள் திரு.சுந்தர்ராசன், திரு.இராசமணிக்கணார் அகவல் பாடல்களை பாடி வள்ளலார் திருவுருவ  படத்திற்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செல்லுத்தினார். திருமதி க.செம்மலர் வள்ளலார் வாழ்வு குறித்தும் , ஆன்மிக தளத்தில் நாம் மாற்ற வேண்டிய கடமைகள் குறித்து  உணர்ச்சிகரமாக உரையாற்றினார். இவ்விழாவில்  வள்ளலார் பணியகத்தின் பொருளாளர்,  திரு .மணிசந்திரன், தமிழ்த் தேசியப் பேரியக்க திருவாளர்கள் பழ.இராசேந்திரன் ,மா.சீனிவாசன் இரா.செயக்குமார் ,கு.லெனின் ,தமிழ் கலை இலக்கியப் பேரவை  புலவர் கோ.நாகேந்திரன்  ,அ.தனபால் மகளிர் ஆயத்தின் துரை.கோகிலா இரா.அமுதா  இராம.கைலாசம்  திரு.பிரபாகரன்  திரளாக கலைஞர் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.