மதுரை தமுக்கம் கலையரங்கத்திற்கு தவத்திரு.சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை மீண்டும் சூட்டக் கோரி ஆர்ப்பாட்டம்
மதுரை தமுக்கம் கலையரங்கத்திற்கு தவத்திரு.சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை மீண்டும் சூட்டக் கோரி ஆர்ப்பாட்டம்
தமிழ் நாடக உலகின் தந்தை தவத்திரு.சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு நூற்றாண்டு நாளான இன்று (13.1.22) மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 11.00 மணியளவில் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை தமுக்கம் கலையரங்கத்திற்கு மீண்டும் சூட்டக் கோரி தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் கர்ணன் (தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு) தலைமை வகித்தார்.
இந்நிகழ்வில் வெற்றிக்குமரன் (நாம் தமிழர் கட்சி, மாநில ஒருங்கிணைப்பாளர்) இராமச்சந்திரன் (தமிழர் தேசிய முன்னணி), மீ.தா.பாண்டியன் (தமிழ்த் தேச மக்கள் முன்னணி) , அருணா (தலைவர் , மகளிர் ஆயம்), நவமணி (பார்வர்ட் ப்ளாக் கட்சி) , தமிழ்நேயன் (தமிழ்த்தேச மக்கள் கட்சி), பொன்பரப்பி அரசேந்திரன் (தமிழின உணர்வாளர்), அழகர்சாமி பாண்டியன் (தேவேந்திரர் இளைஞர் பேரவை) , தமிழ் மாறன் (மள்ளர் பேராயம்), ச.மீ.ராசகுமார் (தமிழக மக்கள் மன்றம்), மணிபாபா (தமிழக வண்ணார் பேரவை), இராச கிருட்டிணன் (தமிழர் தேசியக் கூட்டமைப்பு) , மெய்யப்பன் (தமிழ்த் தேசக் குடியரசசுக் கட்சி), முருகன் ( நாம் தமிழர் கலை இலக்கிய பாசறை), மேகநாதன் (தமிழர் வணிக சங்கம்) முத்து (வனவேங்கைகள் கட்சி), சாரா (நாம் தமிழர் மகளிர் பாசறை), தோழர் இராசுக்குமார் (தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்) ஆகியோர் உரையாற்றினர்.
கதிர்நிலவன் (மாநகர் செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்) நிறைவுரையாற்றினார்.
தோழர் நந்தா (தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு) நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியை தோழர் இளஞ்சென்னியன் (தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு) ஒருங்கிணைத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள், நாம் தமிழர் கட்சி, தமிழ்த் தேசிய பேரியக்கம் மற்றும் பல்வேறு தோழமை இயக்கத்தினர் பங்கு கொண்டனர்.
முன்னதாக மதுரை தமுக்கம் திடலுக்கு வெளியே உள்ள தமிழன்னை சிலைக்கும், சங்கரதாஸ் சுவாமிகள் சிலைக்கும் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
Leave a Comment