ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மலாய் மொழியில் ஆங்கிலம் கலந்தால் தண்டனை..

மலாய் மொழியில் ஆங்கிலம் கலந்தால் தண்டனை..

மலேசிய நாட்டில் தனியார் விளம்பரங்கள், சுவரொட்டிகளில் தேசிய மொழியான மலாய் மொழியில் ஆங்கிலம் கலப்பவர்களையும் அரசு விழாக்களில் ஆங்கிலத்தைக் கலந்து பேசுபவர்களையும் கண்காணிக்கவும், தண்டனைத் தொகை விதிக்கவும், மலேசிய கலாச்சார, கலை மற்றும் தொல் பெருமை அமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதன்படி மலாய் மொழியைச் சிதைத்து வெளியிடும் விளம்பரத் தட்டிகள் மற்றும் சுவரொட்டிகளுக்கு 10,000 ¡¢க்கிட் (மலேசிய நாணயம் இந்திய மதிப்பிற்கு ரூ 12,200) வரை தண்டனைத் தொகை விதிக்கப்படும்.

மலாய் மக்களின் தேசிய மொழி எந்த வகையிலும் ஒதுக்கப்படாமல் காப்பதற்கே இந்த நடவடிக்கை என்றும் முதலில் எச்சா¢க்கை செய்த பின்பே தண்டத் தொகை விதிக்கப்படும் எனவும் கூறினார்.

முந்தைய பி¡¢த்தானிய காலனியான மலேசியாவில் தமிங்கிலம் போல ஆங்கிலமும் மலாயும் கலந்து "மாங்கலீசு" பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலச் சொற்களுக்கு இணையான மலாய்ச் சொற்களையே பயன்படுத்தவும், ஆங்கிலக் கலப்பைத் தடுக்கவுமே அரசு விரும்புகிறது. அதற்கென ஒரு தேசிய மொழிக் குழு அமைக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். இதைப் பார்த்தாவது நம் தமிழர்களுக்கு உணர்ச்சி வரட்டும்.

நன்றி : தமிழர் கண்ணோட்டம் - நவம்பர் 2006

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.