அரிய சான்றுகளும் குறைப் பார்வைகளும்
தமிழினத் தொன்மையையும் தமிழின் தொன்மையையும் நிறுவக்கூடிய சா¢யான வலுவான தொல்லியல் சான்றுகள் அடுத்தடுத்து தமிழகத்தில் கிடைத்து வருகின்றன. ஆனால் இதை ஆய்வு செய்து உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரவேண்டிய அறிஞர்களிடம் ஒரு சண்டித்தனமும் அக்கறை இன்மையும் தென்படுகின்றன. கிடைத்த தொல்லியல் சான்றுகளைப் பற்றிய சிறு குறிப்பும், அதன் காலம் பற்றிய கருத்தும் வெளியிடப்பட்டு விட்டாலே ஆய்வு முடிந்து விட்டதாகப் பொருள் கொள்ளக்கூடாது. கண்டு பிடிக்கப்பட்ட பொருள்களின் உள்ளே வரலாறு ஒளிந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அண்மையில் கிடைத்துள்ள தொல்லியல் சான்றுகளைத் தனித் தனியாகவும், ஒன்றோடொன்று தொடர்புபடுத்தியும் ஆய்வு செய்ய வேண்டும்.
தமிழர்களின் வரலாற்றை மீட்டெடுக்கும் வகையில் தமிழக ஆற்றங்கரைகளிலே சான்றுகள் கிடைத்துள்ளன.
1) காவி¡¢க் கரையிலே - மயிலாடுதுறை செம்பியன் கண்டியூ¡¢ல் கிடைத்திருக்கும் சிந்துவெளி எழுத்துப் பொறிப்புகளுடன் கைக்கோடா¢ (ஏப்ரல் 2006)
2) வைகை தென் கரையிலே - வத்தலக்குண்டிலிருந்து தெற்கே ஆண்டிப்பட்டி அருகே, தேனி மாவட்டத்தில் புலிமான் கோம்பை என்ற இடத்தில், ஈமச்சின்னத்தின் பகுதியாகக் கிடைத்துள்ள, சங்ககால பழந்தமிழ்ப் பொறிப்புகளுடன் மூன்று நடுகற்கள் (மார்ச் 2006)
3) தாமிரவருணிக் கரையிலே - திருநெல்வேலி ஆதிச்சநல்லூ¡¢ல் 2004 இல் இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட அகழ்வாய்வில் தோண்டியெடுக்கப்பட்ட நெற்கதிர், நாரை, பெண், மான் பொறிப்பும் உட்புறம் எழுத்துப் பொறிப்பும் கொண்ட தாழிகள்.
கிடைத்துள்ள சான்றுகள் அ¡¢யன என்றாலும் அவற்றுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆய்வறிஞர்களின் விளக்கங்கள் முழுமையானவையாக இல்லை. சான்றுகளின் காலத்தை நிர்ணயிப்பதில்கூட, கவனமாக இருப்பதாகக் கருதிக் கொண்டு குறைத்துப் பிழைபட நிர்ணயிக்கிறார்கள்.
ஆய்வாளர்களின் ஆழ்மனதில் தமிழகம் என்பது இந்தியாவில் ஒரு பகுதி என்ற உளவியல் ஆழப் பதிந்து கிடப்பதால், கிடைக்கும் சான்றுககளைக்கூட இந்திய அளவுகோல் கொண்டே அளக்கிறார்கள்.
வரலாற்று ஆசி¡¢யர்களும் இந்தியாவை மையமாக வைத்தே இதுவரை அவர்கள் சிந்தித்து வந்ததால், வடக்கேயிருந்து எதுவும் இங்கே வந்திருக்க முடியும் எனற உளவியலோடு அணுகுகிறார்கள். தவறான அணுகுமுறை தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்கிறது.
தமிழக வரலாற்றை எழுதுவதில் ஐந்து தவறான போக்குகளை நாம் காண முடியும்.
1) தமிழகத்தை இந்தியத் துணைக் கண்டத்தின் ஒரு கூறாகவே பார்ப்பது.
2) தமிழக வரலாற்றை எழுதும்போது ஐரோப்பிய வரலாற்றுக் கண்ணோட்டத்தில எழுதுவது.
3) ஓர் இந்தியப் பேரரசு ஆதரவுக் கண்ணோட்டத்தில் பார்ப்பது.
4) இந்தியாவில் பண்பாட்டு ஒற்றுமை இருப்பதாகக் கருதிக் கொண்டு எழுதுவது.
5) தமிழகம் என்பது ஓ¡¢னத்தின் தாயகமாகும் என்ற உண்மையைப் புறக்கணித்து அல்லது முனை மழுக்கி எழுதுவது.
தமிழகத்தின் வரலாறு எழுதப்படுவதில் இடறும் தடைக்கற்கள் இவை. இவற்றை மீறித் தமிழினத் தொன்மையையும், தமிழின் தொன்மையையும் நிறுவ உதவும் வலிமையான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.
கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள மூன்று சான்றுகளும், தமிழின வரலாற்றின் வழியை மறிக்கும் தடைக்கற்களைத் தகர்க்கின்றன.
மூன்று தவறான கருத்தாக்கங்கள்
1) தமிழர்கள் வடக்கிலிருந்து அல்லது மத்தியத் தரைக்கடல் பகுதியிலிருந்து தமிழகத்திற்கு வந்து குடியேறியவர்கள்
2) தமிழர்களுக்குச் சொந்த எழுத்துமுறை கிடையாது. கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் புத்த-சமணத் துறவிகளால் தமிழ் பிராமி எழுததுமுறை இங்கே அறிமுகம் செய்யப்பட்டது.
3) சிந்துவெளி அல்லது சரஸ்வதி ஆற்று நாகா¢கமாகிய ஆ¡¢ய நாகா¢கமே மூல நாகா¢கம். வேத மொழியிலிருந்தே தமிழ் உருவானது.
கிடைத்திருக்கும் கல்வெட்டு மற்றும் தொல்லியல் சான்றுகள் இதுவரை நிலைநிறுத்தப்பட்டு வந்த பொய்மைகளை உடைத்தெறிய வல்லவை. தமிழகத்தின் ஆற்றுச் சமவெளியில் 3500 ஆண்டுகளுக்கும் முந்தைய ஒரு தொன்மையான பண்பாடு நிலவி வந்ததை மெய்ப்பிக்கின்றன. தமிழக ஆற்றுச் சமவெளிகள் தமிழ் நாகா¢கத்தின் தொட்டில்களாக விளங்கியிருக்கின்றன.
அண்மைக்கால கண்டுபிடிப்புகள் சில உண்மைகளை ஐயமற நிறுவியிருக்கின்றன. அவை
1) இந்தியாவின் பழைமையான நாகா¢கமாகக் கருதப்படும் சிந்து சமவெளி நாகா¢கம் (கி.மு. 3250- 2700) தமிழர் நாகா¢கமே.
2) சிந்துவெளி மக்கள் பேசிய மொழியும் தமிழர் பேசிய மொழியும் பயன்படுத்திய எழுத்து வகையும் ஒன்றே.
3) தமிழர்களிடம் எழுத்தறிவு கிமு.1500 க்கும் முன்னாலேயே எங்கும் பரவலாக இருந்தது.
4) வட இந்தியாவில் இரும்புக் காலம் தொடங்குவதற்கு முன்னரே, தமிழகத்தில் இரும்புக் காலம் உயர்நிலையில் விளங்கி வந்தது. அதனால் நாகா¢கத்தின் பன்மை வளர்ச்சி நிலையில் இருந்தது. வட இந்தியாவில் இரும்பின் பயன்பாடு கி.மு.1200 அளவில் வந்தது. தமிழகத்தில் கிமு 1500 லேயே இரும்பு பயன்பட்டு வந்தது.
( முனைவர் த.செயராமன் அவர்களது கட்டுரையை முழுமையாகக் காண தமிழர் கண்ணோட்டம் செப் 2006 இதழ் பார்க்கவும் - வாங்கவும் தமிழர் கண்ணோட்டம் 2ஆம் தளம், 20/7 முத்துரங்கம் சாலை, தி.நகர், சென்னை 17.)
Leave a Comment