சென்னை உண்ணாப் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு - கண்டனம்
உண்ணாப் போராட்டம் நடத்தத் தடை:
அராஜகம் செய்த காவல் ஆய்வாளரைப் பாதுகாக்க
மாநகரக் காவல் ஆணையரின் சட்டவிரோதச் செயல்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்
அராஜகம் செய்த காவல் ஆய்வாளரைப் பாதுகாக்க
மாநகரக் காவல் ஆணையரின் சட்டவிரோதச் செயல்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்
பெ.மணியரசன் கண்டன அறிக்கை
கடந்த 25-1-2008 மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் அன்று தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி இந்தி, ஆங்கில ஆதிக்கங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தியது.
தமிழக அரசின் ஆங்கில ஆதரவு – தமிழ்ப் புறக்கணிப்புப் போக்கைக் கண்டிக்கும் வகையில், முறைப்படி விளம்பரம் செய்து, அறிக்கை கொடுத்து அறிவித்துவிட்டு 25-01-2008 அன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த 'அல்ட்ரா டீலக்ஸ்', 'பாயின்ட் டு பாயின்ட்', 'எஸ்.ஈ.டி.சி' போன்ற ஆங்கில எழுத்துகளை த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ. பத்மநாபன் தலைமையில் கருப்புமை பூசி தோழர்கள் அழித்தனர். அவர்கள் பேருந்துகளுக்கு வேறு சேதமோ, பயணிகளுக்கு இடையூறோ செய்யவில்லை. அப்போது, கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளர் தேன் தமிழ்வளவனும் மற்ற காவலர்களும், அவர்களைத் தடியால் கொடூரமாகத் தாக்கிப் படுகாயப்படுத்தினர். கோவைத் தோழர் பா.தனசேகர் என்பவருக்கு ,டதுகை எலும்பு முறிந்தது. க.பாலகுமரன், ச.பிந்துசாரன், கோ.மாரிமுத்து, பா.சங்கர் உள்ளிட்டோர் படுகாயமுற்றனர்.
சட்டவிரோதமாக வன்முறை ஏவிய காவல்துறையினர்; மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நடவடிக்கை இல்லை.
ஆய்வாளர் தேன் தமிழ்வளவன் மற்றும் தொடர்புடைய காவல்துறையினரை இடைநீக்கம் செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசைக் கோரி சென்னை, சேப்பாக்கம், அரசினர் விருந்தினர் மாளிகை அருகே 22-02-2008 வெள்ளி காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் திரளானோர் கலந்து கொள்ளும் உண்ணாப் போராட்டம் (உண்ணாவிரதம்) நடைத்துவதற்கு அனுமதி கோரும் மனு 4-02-2008 அன்று கொடுக்கப்பட்டது. அவ்வுண்ணாப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து மாநகரக் காவல்துறை ஆணையர் திரு. நாஞ்சில் குமரன் அவர்கள் 21-02-2008 அன்று பிற்பகல் கடிதம் கொடுத்துள்ளார்.
மாநகரக் காவல் ஆணையரின் இம்மறுப்பு திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளது. முதலில் நாங்கள் 19-02-2008 அன்று உண்ணாப் போராட்டம் நடத்த அனுமதி கோரி கடிதம் கொடுத்தோம். அதற்கு மாநகர ஒற்றுப்பிரிவு உயர் அதிகாரி திரு. ,ளங்கோ அவர்கள் 22-02-2008 அன்று உண்ணாப் போராட்டம் வைத்துக் கொள்ளுமாறு வாய்மொழி ஒப்புதல் கொடுத்து, தேதி மாற்றி மனு கொடுக்க சொன்னார். அதே போல தேதி மாற்றி மனு கொடுத்தோம். அவரை அவ்வப்போது அணுகி உண்ணாப் போராட்டத்திற்கான அனுமதிக் கடிதம் கேட்ட போது விரைவில் தருவோம் என்று கூறிவந்தார்.
அதை நம்பி உண்ணாப் போராட்டத்திற்கான விளம்;பரச் செலவுகள் உட்பட அனைத்துச் செலவுகளும் செய்து முடிக்கப்பட்டன. தமிழகமெங்கும் இருந்து இப்போராட்டத்தில் கலந்து கொள்ள பல்வேறு வாடகை வாகனங்களில் வர எமது இயக்கத் தோழர்கள் பணம் கொடுத்து ஏற்பாடு செய்திருந்தனர். ,ந்த நிலையில் உண்ணாப் போராட்டம் நடைபெற வேண்டிய நாளுக்கு முதல் நாள் பிற்பகல் அனுமதி மறுத்ததன் மூலம் எங்களுக்கு ஏராளமான பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் உழைப்பும் விரையமாகியுள்ளது. உயர்நீதிமன்றத்தை அணுகி அனுமதி மறுப்புக்கு தடை வாங்கி உண்ணாப் போராட்டம் நடத்திட வாய்ப்பு தரக்கூடாது என்ற கெட்ட நோக்கத்துடன் மாநகரக் காவல் ஆணையர் 04-02-2008 அன்று கொடுக்கப்பட்ட அனுமதி கோரும் மனுவுக்கு 21-02-2008 அன்று மறுப்பு தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளார். அனுமதி மறுப்புக் கடிதத்தை, நிகழ்ச்சி நடக்க வேண்டிய நாளுக்கு ஒரு வாரம் முன்பதாகக் கொடுக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறியதாகும் ஆணையரின் இச்செயல்.
தன் கீழ் பணியாற்றும் கோயம்பேடு காவல் ஆய்வாளர் தேன்தமிழ்வளவனையும் மற்ற காவல்துறையினரையும் சட்டவிரோத வழிகளில் பாதுகாக்கும் வகையில், நீதித்துறையை அணுகி நிவராணம் தேடும் வாய்ப்பை வேண்டும் என்றே கெடுத்துள்ளார் மாநகரக் காவல் ஆணையர். இது பழிவாங்கும் செயலாகும். அமைதியான வழியில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தக்கூட அனுமதி மறுத்துள்ள மாநகரக் காவல் ஆணையரின் சட்டவிரோத, சனநாயக விரோத செயலை தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
மாநகரக் காவல்துறையின் இந்த சட்டரோத, சனநாயக விரோத செயலை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நீதிகோரி வழக்குத் தொடுக்கவுள்ளோம். உயர்நீதிமன்ற ஆணை பெற்று இவ்வுண்ணாப் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
தோழமையுடன்,
பெ.மணியரசன்
பொதுச் செயலாளர்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment