ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

[பொங்கல் மலர் கட்டுரைகள்] - 'அறிவு உருவாக்க'மும் உலக வங்கியும்

'அறிவு உருவாக்க'மும் உலக வங்கியும்

ஸ்ரீபத் தர்மாதிகாரி

தமிழில் : அமரந்தா

(செப்டம்பர் 21-24, 2007 புதுதில்லியில் பொது விசாரணைக் குழுவிற்கு பொதுமக்கள் சார்பில் திரு.ஸ்ரீபத் தர்மாதிகாரி எழுதியளித்தது. இவர் "மந்தன் படிப்பு வட்டம்" எனும் அமைப்பைச் சேந்தவர். அதன் தேர்ந்தெடுத்த சுருக்கப்பட்ட தமிழ் வடிவம் இது. திரு.ஸ்ரீபத் தர்மாதிகாரி நர்மதா பாதுகாப்பு இயக்கத்தில் மேதா பட்கரோடு இணைந்து மக்களை திரட்டி போராடி வருபவர். பக்ரா நங்கல் அணை பஞ்சாப் உழவர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படுத்தியுள்ள கேடுகளை கள ஆய்வு மூலம் உலகிற்கு எடுத்துக் காட்டியவர். இவரது ஆய்வின்படி இந்த அணையின் காரணமாகவே ஹரியானாவில் 2 லட்சம் எக்டேர் நிலம் உவராகிவிட்டது என்பது கவனம் கொள்ளத்தக்கது.)

 "உலக வங்கி ஓர் அறிவு வங்கியாக ஆக வேண்டும்" என்று அதன் தலைவர் ஜேம்ஸ் உல்ஃபென்ஸான் 1996 ஆம் ஆண்டு அழைப்பு விடுத்தார், உலக வங்கி காலந்தோறும் "அறிவை உற்பத்தி செய்து, அதனை உலகெங்கிலும் பற்பல கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்து செயல்படுத்துவற்கு பயன் படுத்தியதாகவும், வங்கியின் பொருளாதார நடவடிக்கைகளைப் போலவே இதுவும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்றும் உல்ஃபென்ஸான் கூறுகிறார். 2005-08 வரையான முன்றாண்டுகளுக்கு இந்தியாவிற்கான கடன் வழங்கும் கொள்கை மூன்று அடிப்படைத் திட்டங்களைக் கொண்டிருப்பதாக வங்கியின் இந்திய விவகாரங்கள் குறித்த அறிக்கை கூறுகிறது. அவை: (1). விளைவுகளை மையப்படுத்துவது (2). தேர்ந்தெடுத்து முன்னுரிமை அளிப்பது (3). யதார்த்த அரசியலுக்கேற்ற "அறிவை உருவாக்குவதும் வழங்குவதும்" ஆகியவை.

தனியார்மயத்திற்கும் உலகமயத்திற்குமான அறிவார்ந்த ஆதரவை உருவாக்குதல்
அறிவை உருவாக்கவும் வழங்கவும் உலக வங்கி இந்ம அளவு முனைவது "உலகளாவிய வறுமையை ஒழிக்கவும், மக்கள் வாழ்நிலையை மேம்படுத்தவும் உதவும் திறனைக் கண்டடைவதற்கே" என்று கூறப்படுகிறது. ஆனால் அதற்கு வேறு காரணங்களும் இருக்கின்றன என்று புரிந்து கொள்ள முடிகிறது.

கடன் பெறும் நாடுகள் கொள்கை வகுப்பதில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக உலக வங்கி தலையிட்டு வருகிறது. தாராளமயம், தனியார்மயம், உலகமயம் நோக்கி இந்நாடுகளை வலுக்கட்டாயமாக தள்ளி, உலகளாவிய தனியார் முதலீட்டைப் பெருக்குவதில் உலக வங்கி முனைந்திருப்பது வெளிப்படை. தனியார்மயத்தின் மூலமாக வணிகரீதியில் செயல்பட்டு தனிநாடுகளை சந்தைகளாக மாற்றுவதே இதன் நோக்கம். ஆனால் இச்செயலுக்கு பல நாடுகளிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியவுடன் தொடர்ந்து செயல்பட கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த "அறிவு உருவாக்கத் திட்டம்". ஆனால் லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் சர்வதேச ஆலோசகர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அறிவானது மெய் நிலைமைகளை கணக்கில் கொள்ளாமல், பெரும்பான்மை மக்களின் பாரம்பரிய அறிவையும் திறனையும் மதிக்காமல், மேற்சொன்ன தனியார்மய – தாராளமய – உலகமயத்தையே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தகவல்கள், ஆதாரங்கள், அனுபவங்கள் இவற்றில் எதுவுமே கணக்கில் கொள்ளப்படவில்லை.

அறிவு எங்கு உருவாக்கப்படுகிறது?
 'வளர்ச்சி' குறித்த ஆய்வை மேற்கொண்டிருக்கும் உலக வங்கி, இருவகையான அறிவை உருவாக்குகிறது. ஒன்று, உலகின் பல பகுதிகளிலும் நாடுகளிலும் பயன்படுத்தத்தக்க வழிமுறைகளைக் குறித்த அடிப்படை ஆய்வு. மற்றது பொருளாதார திட்டமிடலுக்கான அறிவு. 'வளர்ச்சிக்கான பொருளாதார மையம்' (னுநுஊ) என்ற ஆய்வு மையத்தில் நு}று ஆய்வாளர்கள் உள்ளனர். ஆய்வுக்கான ஒதுக்கீடு இரண்டு கோடியே ஐம்பது லட்சம் வட அமெரிக்க டாலர். வங்கியின் ஆய்வு வலைப்பின்னல், ஆறு பிராந்தியங்களிலிருந்து ஆய்வு முடிவுகளை பத்திரிக்கை கட்டுரைகள், நு}ல்கள், கொள்கை ஆய்வு செயல்பாட்டு அறிக்கை, தரவுகள், உலக வளர்ச்சி மறுபார்வை, ஆண்டு மாநாடுகள் - என தொடர்ச்சியாக வெளியிடுகிறது. 1998க்கும் 2005க்கும் இடையே இந்த ஆய்வு மொத்தம் 4000 அறிக்கைகளையும், நு}ல்களையும் வெளியிட்டது. உலக வளர்ச்சி அளவீடு என்கிற புள்ளி விவரத் தொகுப்பு, உலகிலுள்ள 150 நாடுகளின் பொருளாதார - சூழலியல் - சமூகப் புள்ளி விவரங்களை அளிக்கிறது.

 இந்த ஆய்வுகளைத் தவிர உலக வங்கி தனிநாடுகளில் பலவித முறைகளில் 'அறிவை' உருவாக்குகிறது. பொருளாதாரம், துறைசார் திட்டங்கள், தொழில்நுட்ப உதவி, திட்ட வரைவு, திட்ட மதிப்பீடு, திறன் மதிப்பீடு, திறன் வளர்ப்பு போன்றவற்றில் இந்த 'அறிவு உருவாக்கம்' நடைபெறுகிறது. இவை அந்தந்த நாட்டின் பொருளாதார கொள்கைகளிலும் அவற்றின் விளைவுகளிலும் ஆய்வு செய்வதோடு நின்று விடாமல் அதைக் காட்டிலும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 2004 ஆம் ஆண்டில் மட்டுமே 1500 திட்டங்களில் உலக வங்கி பங்கேற்றது.

வங்கியின் அறிவு வலைப்பின்னல்:
 வங்கியின் உள்கட்டமைப்பைப் போலவே அதற்கு வெளியில் உள்ள ஆய்வாளர்களோடும் ஆய்வு மையங்களோடும் வல்லுனர்களோடும் வங்கி உருவாக்கியுள்ள இணைப்புகளும் வலைப்பின்னல்களும் மிகவும் பரந்துப்பட்டவை. சர்வதேச வேளாண் ஆராய்ச்சிக்கான ஆலோசனைக் குழு (ஊபுஐயுசு) அதில் ஒன்று. இந்த அமைப்பு பதினைந்து ஆய்வு மையங்களைக் கொண்ட உலக வங்கியின் 'அறிவு வங்கி' உருவாக்குவதற்கு முன்பே தோன்றிய அமைப்பாகும். மற்றொன்று 80 நாடுகளில் 120 தகவல் அறியும் மையங்களைக் கொண்டிருக்கும் 'உலகாளாவிய வளர்ச்சித் தரவுகளின் வலைப்பின்னல்' (புனுடுN). மூன்றாவது உலக வங்கி மையம் (றுடீஐ). இந்த அமைப்பு 2007 ஆம் ஆண்டில் மட்டுமே 700 திட்டங்களை தனது 75,000 வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளது. 211 ஆய்வுக்கான உதவித்தொகைகளை அளித்துள்ளது. இது தனது 'அறிவை' அளிக்கும் நாடுகள்: பர்க்கினா ஃபாசோ, சீனா, எகிப்து, எத்தியோப்பியா, ஃபிரான்ஸ், கானா, இந்தியா, நைஜீரியா, செனகல், டான்கானிகா, துருக்கி.
 
இந்த வலைப்பின்னல்கள் அறிவை 'உருவாக்குவதோடு' நில்லாமல் அதனைப் பரவலாக்கி, நியாயப்படுத்துகின்றன. வங்கியின் ஆய்வு முறையை நிரந்தரமாக்கி, அவை சர்வதேச அளவில் பரவி நிலைப்பதையும் சாத்தியமாக்குகின்றன.

இந்தியாவில் 'அறிவை உருவாக்கும்' உலக வங்கி
 பகுதிசார் பணிகள், ஆய்ந்து அறிவுரை வழங்குதல், தொழில்நுட்ப உதவி, மாநாடுகள், பயிலரங்குகள், திட்ட வரைவு ஆய்வுகள், திட்டச் செயல்பாட்டு ஆய்வுகள், திட்ட முடிவுகள் குறித்த மதிப்பீடுகள் என இந்தியாவில் வங்கி 'பணி;' செய்கிறது. 2005க்கும் 2008க்கும் இடைப்பட்ட காலத்தில் 15 முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு 'ஆய்வு செய்து அறிவுரை அளிக்கிறது'. இவற்றுள் முக்கியமானவை: (1). வளர்ச்சிக்கான நிலப் பிரச்சினைகள் (2). நீர் ஆதாரங்கள் (3). வேளாண் சந்தை ஆகியவை. பதினைந்தில் பத்துப் பணிகள் ஏற்கெனவே முடிந்து விட்டன. மேலும் 7 புதிய ஆய்வுகள் யாவும் பொருளாதாரக் கொள்கைத் திட்டங்களுக்கும், பொருளாதார ஆய்வுக்குமான இந்திய நிறுவனங்களுடனும் சிந்தனைக் குழுக்களுடனும் இணைந்து உருவாக்கப்பட்டவை.
 
இத்தகைய பணிகளை உலக வங ;கி பல சந்தர்ப்பங்களில் ஆசிய வளர்ச்சி வங்கி, சர்வதேச வளர்ச்சிக்கான பிரிட்டிஷ் அரசின் அமைப்பு போன்ற பிற சர்வதேச அமைப்புகளுடன் இணைந்தும் நிறைவேற்றுகிறது. நிதி நிறுவனங்களுக்கு  பற்பல நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடை தொகைகளை 'நிர்வாகம்' செய்கிற வேலை உலகவங்கிக்கு உண்டு. தண்ணீர் – சுகாதாரத் திட்டம் (றுளுP), பொது - தனியார் உள்கட்டமைப்பு ஆலோசனை மன்றம் (PPஐயுகு) போன்ற நிறுவனங்களும் இதில் அடங்கும். மேற்சொன்ன அனைத்து நிறுவனங்கள் மூலமாகவும் செயல்பட்டு தாராளமயம், தனியார்மயம், உலகமயம் ஆகியவற்றுக்கு உகந்த நடவடிக்கைகளையே உலக வங்கி ஊக்குவிக்கிறது.

 இந்தியாவைப் பொறுத்தவரை வர்த்தக உறவுகளில் சீரமைப்பு, நேரடி அயல் முதலீடு, பன்னாட்டு கம்பனிகளை மறுகட்டமைப்பு செய்து கடன்களைத் திருப்பித் தராமல் தப்பிக்கும் வழமுறையை உள்ளடக்கிய வகையில் சீரமைப்பது, தேசிய நிறுவனங்களை தனியாருடன் போட்டியிடும் வண்ணம் சீரமைப்பது, அதன் மூலம் அந்நிய மற்றும் உள்நாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பது ஆகியவை உலக வங்கி மத்திய அரசில் செய்திருக்கும் மாற்றங்கள். மாநிலங்களைப் பொறுத்தவரை முதலில் 'விருப்பமுள்ள' மாநிலங்களில் மட்டுமே நுழைந்த உலக வங்கி தற்போது 'கொள்கை விவாதம்' 'தொழில்நுட்ப உதவி' ஆகியவற்றின் மூலமாக அனைத்து மாநிலங்களிலும் 'சீரமைப்பு' நடவடிக்கைகளில் புகுந்துள்ளது. அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் ஆசிய வளர்ச்சி வங்கி பற்பல நிபந்தனைகளை விதித்து நிதி அளிக்க ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆந்திரம், பிகார், கர்நாடகம், ஒரிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆய்வு செய்து அறிவுரையும், கூடுதல் கடனும் வழங்கப் போகிறது.
 
வறுமை தாண்;டவமாடும் நான்கு மாநிலங்களில் மூன்று மாநிலங்களுக்கு அடிப்படை சீரமைப்பு தேவைப்படும் பிரச்சினைகளுக்கான பொருளாதார அறிக்கையை உலக வங்கி தயாரித்துள்ளது. வங்கி ஏற்பாடு செய்யும் மாநாடுகள், கருத்தரங்கம், பயிலரங்கம் ஆகியவற்றில் உருவாகும் 'வளர்ச்சிக் கொள்கை அறிக்கை' மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பயிற்றுவிக்க பயன்படுத்தப்படுகிறது.
 
இவ்வாறு 'உருவாக்கப்படும் அறிவு' எவ்வளவு பிழையானது என்பதை இனி காண்போம்.

எடுத்துக்காட்டு 1:
நீர்த்துறை மறுஆய்வு – 1998 மற்றும் நீர் விற்பனைக்கான உரிமை
உலக வங்கி 1996 ஆம் ஆண்டு இந்தியாவின் நீர் ஆதாரங்கள் குறித்த விரிவானதோர் ஆய்வைத் தொடங்கியது. இதில் இந்திய அரசும், உலக வங்கியும் தவிர பிரிட்டன், டென்மார்க், நெதர்லாந்து ஆகிய நாடுகளும் பங்கேற்றன. இவை 'இந்திய நீர்த்துறையின் சீரமைப்புக்கும்' செயல்பாட்டிற்குமான திட்டத்தை உருவாக்கின. பல வல்லுனர்களின் உதவியோடு இந்திய அரசு ஏற்படுத்தித் தந்த அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி உலக வங்கி 1998ல் ஐந்து முக்கிய அறிக்கைகளை வரைந்தது. (1). பல்துறைகளுக்கும் நீர் ஒதுக்கீடு : திட்டமும் நிர்வாகமும் (2). நிலத்தடி நீர் முறைப்படுத்தலும் நிர்வாகமும் (3). நீர்ப்பாசனம் (4). கிராமப்புற நீர் விநியோகமும் சுகாதாரமும். இந்த ஐந்தையும் உள்ளடக்கிய ஆறாவது அறிக்கையும் வெளியானது.

"நீரை விலைக்கு விற்க வேண்டும்;;@ மக்களுக்கு நீர் பெறும் உரிமை உள்ளதால், பயனுள்ள வகையில் நீரைப் பயன்படுத்துவோருக்கு அது பகிர்ந்து அளிக்கப்படுகிறது என்ற 'அறிவார்த்தமான' புரிதல் அடிப்படையில் நீரை விநியோகிக்க வேண்டும். இதுவே அரசியல்ரீதியில் கவர்ச்சிகரமானது, நடைமுறை சாத்தியமுள்ளது" என்று உலக வங்கி பரிந்துரைத்தது.

இதன் உண்மையான பொருள் அநியாயமானது. அதாவது விவசாயிகள் பயிருக்குப் பாய்ச்சும் நீரை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விலைக்கு விற்க வேண்டும். நீரை பயிருக்குப் பாய்ச்சுவதைக் காட்டிலும் விலைக்கு விற்பது அதிக லாபம் தரும் என்று கருத வாய்ப்புள்ளது (சென்னையை இதற்கொரு எடுத்துக்காட்டாகக் கூறலாம்).

இந்த அநியாயத்தை நியாயப்படுத்த உலக வங்கி நமக்கு சிலெ நாட்டின் அனுபவத்தைக் கூறுகிறது. சிலே நாட்டில் 1981 ஆம் ஆண்டு நீர் விற்பனைக்குரியதாக மாறிய பின்பு கிடைத்த லாபங்களை அறிக்கை முன்வைக்கிறது. அதாவது 'நீரை அதிகபட்ச பயனுள்ள முறையில் செலவழிப்பது' என்ற அடிப்படையில் ஆய்வு முடிவுகள் அமைந்திருந்தன. நீர் விற்பனைப் பண்டமானதால் விளைந்த மோசமான பின்விளைவுகளைப் பற்றிய குறிப்பேதும் இந்த அறிக்கையில் கிடையாது. இது போன்ற உலக வங்கி அறிக்கைகள் எதிலுமே பண லாபத்தை மட்டுமே முன்வைத்து, அதனால் மனிதகுலம் அடைந்த துன்ப துயரங்களோ, சுற்றுச்சூழல் பாதிப்போ, சமூகச் சீர்குலைவோ குறிப்பிடப்படுவதே கிடையாது. சிலே நாட்டில் நீர் விற்பனையால் ஓரிரண்டு வல்லமை படைத்த கம்பெனிகளும், ஒரே ஒரு தனிநபரும் மட்டுமே நாட்டின் நீர் உரிமையில் 70 விழுக்காட்டுக்கு சொந்தக்காரர்கள்!

அறிக்கை என்பது ஒரு திட்டத்தின் நன்மை – தீமை இரண்டையும் குறிக்க வேண்டாமா? அப்போது தானே அது அடுத்தவரிடம் பரிந்துரைக்கப்பட முடியும்? தீமைகள் தனியாக வேறோர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக வேறோரிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் திட்டத்தின் தீய விளைவுகளை அறிக்கையில் சேர்த்தால் சிலெ நாட்டின் பேரைச் சொல்லி இந்தியாவில் நீரை விற்பனை செய்யும் திட்டத்தை ஏற்கச் செய்ய முடியாது என்று தெரிந்துதான் அதையெல்லாம் சேர்க்கவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறதல்லவா?

எடுத்துக்காட்டு 2:
பெரிய அணைகளை நியாயப்படுத்தும் வெளியிடப்படாத ஆய்வறிக்கைகள்

 1980, 1990 களில் பெரிய நீர் அணைகள் கட்டுவதை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் உலகெங்கும் தோன்றி வளர்ந்தன. இதனால் அணைகளைக் கட்ட கடன் வழங்கிய உலக வங்கி கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. வளர்ச்சியில் பெரிய அணைகளின் பங்களிப்பு குறித்த ஆய்வு 1998ல் மேற்கொள்ளப்பட்டது. அணைகளுக்கான உலக ஆணையம் (றுஊனு) 2000 அக்டோபரில் வெளியிட்ட அறிக்கை, பெரும்பாலான அணை எதிர்ப்பாளர்களும் முன்வைத்த வாதங்களை ஒப்புக் கொண்டது. இதனால் பயந்து கடன்தராமல் ஒதுங்கிய உலக வங்கியிடம் 'எப்படியாவது' கடன் தருமாறு பெரிய அணைத் திட்டங்களை நிறைவேற்றத் தயாராக இருந்த அரசுகள் வற்புறுத்தின. உலக வங்கிக்கோ ஏதோவொரு நொண்டிச்சாக்கு தேவைப்பட்டது. அதற்கென வங்கி பயன்படுத்திய முறை தான் 'அறிவு உருவாக்கம்'. உலக வங்கி "பெரிய அணைகளால் உருவாகும் பல்வேறு தொடர் விளைவுகள்" என்ற பெயரில் உலகின் நான்கு பெரிய அணைகள் குறித்த ஆய்வைத் தொடங்கியது. "கண்ணுக்குப் புலப்படுகிற நேரடியான விளைவுகளைத் தவிர, மரபான செலவுப் பயனாய்வு அறிக்கைகளில் தென்படாத மறைமுகமான பொருளாதார விளைவுகளும் வெளிப்படும் வகையில்" ஒரு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டது.
 
இந்தியாவின் பக்ரா நங்கல் அணையும், எகிப்தின் அஸ்வான் அணையும் இதற்கென தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்தியாவின் பசியை நீக்கியது, உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்தது, பஞ்சாப், ஹரியானா  மாநிலங்களை வளமான உபரி உற்பத்தி செய்யும் மாநிலங்களாக ஆக்கியது, 'நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற கோவில்' என நேருவால் அழைக்கப்பட்டது – என பக்ரா நங்கல் அணையின் புகழ் பரவலானது. தேர்தலில் கட்டாயமாக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடி இருக்கும் போது, 'பாதுகாப்பான' தொகுதியே தேர்வு செய்யப்படுகிறது. உலக வங்கி பக்ரா நங்கல் அணையைத் தனது ஆய்வுக்காக தேர்வு செய்ததும் இதே அடிப்படையில் தான். ரமேஷ் பாட்டியாவும் ரவீந்தர் மாலிக்கும் அணையின் பிரமாதமான பயன்களை வரிந்து கட்டிக்கொண்டு எழுதியதில், இந்தியாவில் எங்கு வேண்டுமானலும் அணைக்கட்டுவதை நியாயப்படுத்துவது உலக வங்கிக்கு எளிதாகிவிட்டது. அணைகள் நகர்ப்புற வறுமையை போக்கவும், கிராமப்புற நிலமற்ற ஏழைகளுக்கு உதவுவதிலும் பெருமளவுக்கு பங்களித்துள்ளன என்று பெரிய அணைகளைக் கட்டுவதற்கு இந்த அறிக்கையை முன் வைத்து நியாயம் கற்ப்பிக்கப்பட்டது.

இதில் வேடிக்கை என்னவென்றால், உலக வங்கியின் இது போன்ற முக்கியமான முடிவுகளுக்கும் வாதங்களுக்கும் ஆதாரமான அறிக்கை இதுவரை வெளியிடப்படவே இல்லை. உலகவங்கியின் ஆய்வு முடிவு மத நம்பிக்கைகளை போல கேள்வியின்றி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றன. பெரிய அணைகள் கட்டுவதை நியாயப்படுத்தும் இந்த அறிக்கையின் முடிவுகளுக்கான ஆதாரங்கள் எதுவும் துறைசார் வல்லுனர்களின் பொதுமக்களின், திட்டம் வகுப்போரின் பரிசீலனைக்கு உட்படுத்தப்படவே இல்லை. "நான் சொல்கிறேன் அணைகள் நன்மை தான் பயக்கும்" என்கிறது உலக வங்கி.

வங்கி அறிவின் முறைமையும் மேலாதிக்கமும்
 1990 களில் உலக வங்கி நீர் விநியோகம் தனியார்மயமாவதை பெரிய அளவில் ஆதாரித்தது. 2004 செபட்ம்பரில் நடைபெற்ற சர்வதேச நீர் கூட்டமைப்பின் உலக மாநாட்டில் உலக வங்கியின் மூத்த நீர் வள ஆலோசகர் ஜான் ஃபிரிஸ்கோ, "தனியார்துறை உள்கட்டமைப்பை கவனித்துக் கொள்ளும் என்றெண்ணி வாளாவிருந்ததால் கடந்த பத்தாண்டுகள் வீணாகிப் போய்விட்டன" என்று சொல்லிப் புலம்பினார். அங்கும் இங்கும் சில பத்தாண்டுகள் வீணாகிப் போய்விட்டது உண்மைதான். மக்கள் பெருந்துயரத்தில் ஆழ்ந்திருப்பதும் உண்மை தான். ஆனால் இதற்கு காரணமான உலக வங்கியின் அறிவுரை மட்டும் இன்றும் பின்பற்றப்பட்டு நடைமுறையிலிருக்கிறதே? ஏன், எப்படி?

 உலக வங்கியின் நிதி மேலாதிக்கத்திற்கு வங்கி வழங்கும் கடன்கள் மட்டுமே காரணமல்ல உலகின் தனியார் முதலீட்டிற்கு ஆதாரமான பல நிதி நிறுவனங்களுடன் உலக வங்கிக்கு பலவகை தொழில்ரீPதியான தொடர்புகள் உள்ளன. வங்கியின் கடன் வழங்கும் கொள்கை, அறிவுப்பகிர்வு ஆகியவற்றில் பெருந்தொழில் முதலீட்டாளர்களின், பன்னாட்டு பெருமுதலாளிய நிறுவனங்களின் பங்கும் இருக்கிறது. உலக வங்கி மூலமாக கடன் வழங்குவதால் ஆண்டுதோறும் இத்தகைய நிறுவனங்களுக்கு பலகோடி டாலர் வருமானம் ஒப்பந்தங்கள் மூலமாகவும் ஆலோசனை வழங்கல் மூலமாகவும் கிடைக்கிறது. அது மட்டுமின்றி வங்கியின் ஆய்வும் அறிவும் முன்வைக்கும் திட்டங்கள் பல மடங்கு கூடுதல் வருமானத்தையும் ஈட்டித் தருகின்றது.
 
'அறிவை உருவாக்குவதிலும் பரவலாக்குவதிலும்' வங்கியின் மேலாதிக்கத்திற்கு பரந்துபட்ட வலைப்பின்னலே காரணம். பல நாடுகளைச் சேர்ந்த ஆய்வு நிலையங்களின் அறிவு ஜீவிகள், ஆசிரியர்கள், தொழில்வல்லுனர்கள், அரசு சாரா நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரிடமிருந்து இந்த வலைப்பின்னலில் சேகரிக்கப்படும் அறிவு அந்தந்த நாடுகளின் அறிவு உற்பத்தியாகும் அமைப்புகளுள் ஊடுருவ வழி செய்கிறது. இதே போன்ற மற்றொரு செயல்பாடு தான் "சுழல் கதவு" என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கதவின் வழியாகத் தான் அரசின் உயர்மட்டஃஇடைமட்ட அதிகாரிகள் உலக வங்கியில் குறுகிய காலப் பணிக்கு பரிந்துரைக்கப்பட்டு (னுநிரவயவழைn) செல்கிறார்கள்.

 வங்கியின் சிந்தனை முறைக்கு முரணான சிந்தனையைக் கொண்டிருந்தால், வங்கியின் வளர்ச்சி வலைப் பின்னலில் இடம் பெற்றிருந்தாலும் சரி, சுழல் கதவு வழியே வந்தவர்களானாலும் சரி, அதிக லாபம் பார்க்க முடியாது.

சவால்கள்
 வங்கியின் முக்கியமான பணிகளில் ஒன்று "வேறு மாற்று ஏதும் இல்லை" (வுhநசந ளை ழெ யுடவநசயெவiஎந – வுஐNயு) என்ற எண்ணத்தை ஆழப்பதியச் செய்வது. உலக வங்கியின் கொள்கைக்கு, அது உருவாக்கும் அறிவுக்கு மாற்று இல்லையென நம்பி செயலற்றுப் போகச் செய்வது.

எனவே அதன் அறிவு உருவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலாதிக்கத்தை உடைத்து நொறுக்குவதே இன்று நம்முன் உள்ள சவால். உலகவங்கி இந்த விளையாட்டில் பங்கேற்கும் பல நிறுவனங்களில் ஒன்றே என்பதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். சமீபத்தில் இந்திய – வட அமெரிக்க வேளாண் அறிவு குறித்த முயற்சியாகட்டும், நீர்த்துறைக்கான பழமையான ஆலோசனை மையங்களாகட்டும் - தற்போதுள்ள ஆய்வு நிறுவனங்களிலுள்ள கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், அரசுகள், பன்னாட்டு லாப நோக்கர்கள் போன்றோராகட்டும் இவர்களிடையே வேறுபாடுகள் மெல்ல மறைந்து வருகின்றன.
 
இரண்டாவதாக, ஜனநாயகப்படுத்தப்பட வேண்டியது அறிவு உருவாக்கம் மட்டுமல்ல – அதன் இலக்குகளை முடிவு செய்யும் முறையும் கூடத்தான் என்று உணர வேண்டும். இவ்வாறு கருத்துக் கூறும் போது மரபான உள்நாட்டு அறிவைப் பற்றி ஊதிப் பெருக்க நாம் விரும்பவில்லை. அதன் வலிமையையும் வரம்புகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். வல்லுனர் அறிவுக்கும் இது பொருந்தும். இதற்கிணையான முக்கியத்துவம் தரப்பட வேண்டியது வேறொன்றுண்டு. அறிவு உருவாக்கம் என்ற செயலை அதிக லாபம் என்ற குறிக்கோளிலிருந்து விலக்க வேண்டும். பொதுமக்கள் நலன், சமத்துவம், நீதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை உருவாக்கும் நோக்கம் கொண்டதாக மாற்ற வேண்டும்.
 
இறுதியாக அறிவு என்பது நமது வளர்ச்சிப் போக்கினைக் கட்டுப்படுத்தும் வலிமை கொண்டதாக இருக்க வேண்டும். கட்டுப்படுத்தும் வலிமையைப் பெறுவது என்ற முக்கியமான நோக்கம் தான் உலக வங்கியை அறிவு உருவாக்கத்தில் இந்தளவு கவனம் குவிக்கச் செய்கிறது. வங்கியின் ஆயு;வுகள் குறித்த வெளியாரின் மதிப்பீடு இவ்வாறு கூறுகிறது:
 
"கடன் வழங்கும் செயல்பாடு குறைக்கப்பட்டு, கொள்கை அறிவு வழங்கும் முக்கிய ஆதாரமாக உலக வங்கி புது வடிவம் எடுக்க முயற்சிகள் மேற்கொண்டிருப்பதை நாம் அறிவோம். வங்கியின் சேவை மாற வேண்டுமென்ற தேவைக்கு செவிசாய்ப்பதாகவே இந்த மாற்றம் உள்ளது. நடுத்தர வருமானம், கொண்ட மெக்ஸிகோ போன்ற நாடுகளுக்கும், நடுத்தர வருமானத்தை எட்ட முயலும் இந்தியா போன்ற நாடுகளுக்கும் உண்மையில் உலக வங்கியின் கடன்கள் தேவையில்லை, அல்லது விரைவில் தேவையில்லாத நிலை வந்துவிடும்".
 
உலக வங்கிக்கு எதிர்காலத் திட்டம் உண்டு.
நமக்கு ?


 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.