தூண்டில்காரனும் நடப்பு நிதி ஆண்டும் - முழுநிலவன்
வெயில் தாளாமல்
வேப்பமரத்தின் நிழல்
குளத்துக்குள் இறங்கி
குளித்துக் கொண்டிருக்க
கரையில்
பழைய பாடல் கேட்டபடி
ஒரு து}ண்டில்காரன்
வேப்பமரத்தின் நிழல்
குளத்துக்குள் இறங்கி
குளித்துக் கொண்டிருக்க
கரையில்
பழைய பாடல் கேட்டபடி
ஒரு து}ண்டில்காரன்
மண்புழுவை கோத்துக் கோத்து
து}ண்டில் வீச
கொழுத்துத் திரியும் கெண்டைகள்
பெரும்பாலும் சிக்குவதில்லை
எப்போதும் கெளுத்திகள்,
சிலேப்பிகள்தான்
பழைய ரேடியோ பெட்டிதான்
பொழுதுபோக்கு
இப்போது அதில் செய்தி நேரம்
பட்ஜெட், ப.சிதம்பரம், கடன் தள்ளுபடி
வருமானவரி என ஏதேதோ சொல்ல
அவசர அவசரமாய்
அலைவரிசை மாற்றினான்
து}ண்டில் காரன்
இவனுக்கு தெரியும்
இப்போதும் இவன்
மீன்பிடிப்பவன்தான்
ஆனால்
இந்த குளத்துக்குள்
திமிங்கிலம் இல்லை
சுறாக்கள் இல்லை
இவனிடமும் படகு இல்லை
படகு நிறைய வலைகள் இல்லை
இன்னமும் இவன் மீன்பிடிப்பவன்தான்
இந்தியக் குடிமகன்தான்
ஆனால் இவனுக்கும்
ப.சிதம்பரம், பட்ஜெட்டுக்கும்
யாதொரு சம்பந்தமும் இல்லை.
உயிர்த்தெழவிருக்கிற
கர்த்தர் மீது சத்தியமாய்
இவன் மீன்பிடிப்பவன்தான்
இந்தியக் குடிமகன்தான்
ஆமென்!
Leave a Comment