ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இந்திய அரசின் சூழ்ச்சியை அம்பலப்படுத்துகிறது நாகா வீடுதலை இயக்ககம்

இந்தியத் தலைமைத் தளபதி தீபக் கபூர் தங்களுடைய கையாள் அமைப்பான
கப்ளாங் அமைப்பைக் கொண்டு நாகா விடுதலை  இயக்கத் தலைவர்களை
பேச்சு வார்த்தைக்கு அழைத்து நயவஞ்சகமாகக் கொலை செய்ய திட்ட
மிட்டிருந்தார் என நாகா தேசிய சோ~லிஸ்ட் கவுன்சில் தலைவர்கள்
ஐசக், முய்வா ஆகியோர் குற்றம் சாட்டுகின்றனர்.
 
கபூரோடு இந்த சதித் திட்டத்தில் பங்கு பெற அழைக்கப்பட்டிருந்த விக்கி
என்பவரை கடந்த மார்ச் 18-ஆம் நாள் திம்மப்பூரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் நாகா இயக்கம் நிறுத்தியது. அப்போது இந்த உண்மையை அவர் போட்டு உடைத்தார். தலைக்கு ரூ.10 இலட்சம் வழங்குவதாக கடந்த 2005 நவம்பர் 21–ஆம்  நாள் நடந்த இரகசிய சந்திப்பில் தீபக் கபூர் கூறினாராம். இந்திய அரசு நாகா மக்களின் பொறுமையைத் தவறாகப் பயன்படுத்தி நிலைமையைக் குழப்பப்
பார்க்கிறது என நாகா தேசிய சோ~லிஸ்ட் கவுன்சில்(ஐமு) குற்றம் சாட்டியுள்ளது. "இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்
இந்திய அரசமைப்புக்குள் நாகா சிக்கலைத் தீர்ப்பதற்கு ஏராளமான வாய்ப்பு உள்ளதாக கூறுவதும், இந்திய அரசமைப்புக்குள் கூடுதல் தொலைவு சென்று
இச்சிக்கலைத் தீர்க்க தான் தயாராக இருப்பதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கூறுவதும் அவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதில் அக்கறை கொள்ளவில்லை
என்பதையே காட்டுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் தான் நாகா சிக்கலுக்கே அடிப்படையாகும். இச்சட்டம் தீர்வுக்கு ஒருபோதும் வழி ஏற்படுத்தாது. இதனை
பலமுறை இந்திய அரசுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறோம். இந்திய – நாகா பேச்சு
வார்த்தைகள் அறுபது சுற்று நடந்து முடிந்ததற்குப் பிறகும் இந்திய அரசு இவ்வாறு பேசுவது ஐயத்தை ஏற்படுத்துகிறது. நாகர்களின் பொறுமையை இந்திய அரசு மதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது" என அவ்வறிக்கை கூறுகிறது.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.