ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழாய்ந்த தமிழன் - பாவலர் வையவன்

இந்தென்றால் திருடனென்றும் இராமனா என்ஜினியöரன்றும்

என்னமாய் பகுத்தறிவின் துலக்கம்!  ஆனால்

திருடர்களின் பணத்தாலே திட்டங்கள் தீட்டுகிறாய்

நாராயணி, பாபாவுடன் இணக்கம் நல்ல

அறிவோடு ஆன்மீக விளக்கம்பெரியார்

கைபிடித்து வந்தேனென முழக்கம்!
 

ஈழத்தமிழ் மக்களெங்கள் உடன்பிறப்பு ரத்தமென்று

தேர்தலுக்குத் தேர்தல்பெரு மூச்சு ஆனால்

ஈழமக்கள் விடுதலைக்கு எழுதினாலோ பேசினாலோ

ஈட்டிபோல சட்டங்களின் வீச்சு இதுதான்

தமிழாய்ந்த தமிழ்த் தலைவர் பேச்சு அடுக்குத்

தமிழாலே அரிதாரச் பூச்சு!
 

குறையாடை நடிகை வந்து கூத்தாடும் திøரப்படத்தின்

பெயர்மட்டும் தமிழென்றால் பரிசு ஆனால்

விøரந்தோடும் பேருந்தில் விளங்குகின்ற ஆங்கிலத்தை

வீறுகொண்டு அழிப்பவர்கை முறிவு இதுவா

தமிழாய்ந்த தமிழனது முடிவு கிட்ட

நெருங்குதடா தமிழினத்தின் அழிவு!
 

செம்மொழியும் தமிழ்பாட ஆணைகளும் செய்கின்றாய்

பல்லறிஞர் போராடிக் கேட்டு ஆனால்

சொந்தமாய்ச் சிந்தித்துச் செய்ததைக் கணக்கிட்டால்

சிலைகளும் கோட்டமுமா காட்டு? தொண்டர்

ஓடுகிறார் கோயில்குளம் பார்த்து "இனிஷியல்'

போடுகிறார் ஆங்கிலத்தைச் சேர்த்து!
 

தமிழுணர்வும் இல்லாத பகுத்தறிவும் இல்லாத

தொண்டனிங்கு தி.மு.க.வின் "ஓட்டு' "டாக்டர்'

கலைஞöரன்று சொல்வதொன்றே தமிழருக்கு முழுத்தகுதி

தவறாமல் கிடைத்துவிடும் "சீட்டு' தேன்தமிழ்

வளவனன்றோ அடிக்கின்றான் போட்டு தமிழர்க்கிது

திராவிடரின் ஆட்சிவைத்த வேட்டு!

 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.