இறைக்குருவனாருக்குச் சிறப்பு விருது

இறைக்குருவனாருக்குச் சிறப்பு விருது
திருக்கழுக்குன்றம் மறைமலையடிகள் மன்றம் வழங்கியது!

அண்மையில் (14.05.2008) கன்னியாகுமரியில் திருவள்ளுவர் அறக்கட்டளையின் சார்பில் முழுநாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற இμண்டணிம் திருக்குறள் விழாவில், திருக்குறள் மணி புலவர் இறைக்குருவனார் அவர்களுக்குத் திருக்கழுக்குன்றம் மறைமலையடிகள் மன்றம் திருக்குறள் செந்தொண்டர் என்னும் சிறப்பு விருதும், ஓரிலக்கம் (1,00,000) உருவா பணக்கொடையும் வழங்கிச் சிறப்பித்தது. விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக அன்று மாலை கடற்கரையில் திரு.மா.செ.தமிழ்மணி தலைமையில் நடைபெற்ற பொது அரங்கத்தில் பெரியார் பெருந்தொண்டர் வே.ஆனைமுத்து ஐயா, மறைமலையடிகள் மன்றச் சார்பில் திருக்குறள்மணிக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். மறைமலையடிகள் மன்றத் தலைவர் முத்துப் பெருமாள் ஐயா அவர்கள் விருது வழங்கினார். மன்றச் செயலாளர் திரு.வீ.இறையழகன் ஓர் இலட்சம் உருவாய்க்கான காசோலையை வழங்கிச் சிறப்பித்தார்.

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

emo-but-icon

அனைத்து இதழ்களையும் படிக்க

புத்தக வடிவில் படிக்க

புத்தக வடிவில் படிக்க
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்

தினம் ஒரு குறள்

தமிழகம்

தமிழீழம்

அதிகம் பார்த்தவை

தேடுக

செய்தித் தொகுப்பு

item