ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தோழர் கோமதிக்கு இரங்கல்

தமிழ்ச் சிற்றிதழ்களைத் திμட்டித் தொகுத்து ஆவணப்படுத்துவதில் சாதனை புரிந்தவர்களில் திருச்சி தோழர் தி.மா.சரவணண் முதன்மையானவர். அச்சாதனையில் சரிபாதிப் பெருமை அவர் துணைவியார் கோமதிக்குரியது. நூல் சேகரிப்பு, நூல்களை ஒழுங்குபடுத்திப் பராமரிப்பது, நூல் விற்பனைக்குச் செல்வது போன்ற பணிகளைச் கோமதி பகிர்ந்து கொண்டார். சரவணண்-கோமதி இருவரும் காதலித்து,
சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார்கள். இந்தக் காதல், மனதை மையப்படுத்திய காதல்.
 
கோமதிக்கு சிறுவயதிலேயே இதயத்தில் ஓட்டை விழுந்துவிட்டது. வசித்த பகுதியில் ஒருவர்க் கொருவர் அறிமுகமாயினர். அன்பு பணிμணிட்டிக்ர். அப்போது கோமதியின் இதயநோய் சரவணனுக்குத்    தெரியவந்தது. சென்னை, வேலூர் என சிறந்த இதயநோய் மருத்துமனைகளுக்கு சரவணண் அழைத்துச் சென்றார். குணப்படுத்த முடியாது; குறுகிய ஆயுள்தான் என்று இதய நோய் வல்லுர் மருத்துவர்
செரியன் கூறிவிட்டார். அதன் பிறகு அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். தோழனும் தோழியுமாய் 20 ஆண்டுகள் குடும்பம் நடத்தினர். குழந்தை இல்லை. தமிழ்க் கலை இலக்கியப்  பேμணிஅ‹ன் திருச்சிப் பொறுப்பாளர்களில் ஒருவர் தோழர் தி.மா.சரவணண். தோழர் கோமதி தமிழ்த்
தேசியம், மகளிர் விடுதலை ஆகியவற்றில் ஆழ்ந்த பற்றுடையவர்.

கடந்த 26.4.2008 அன்று மாலை திடீர் மாரடைப்பால் தோழர் கோமதியின் இதயம் துடிப்பதை நிறுத்தி கொண்டது. அன்புக்குப் பொருள் சொன்ன அருள் நங்கை கோமதி; கோமதியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.