ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

துரோகியை புறந்தள்ளி முன்னேறும் கூர்கா இன மக்கள் - செவ்வேள்

துரோகியை புறந்தள்ளி முன்னேறும் 
கூர்கா இன மக்கள் - 
செவ்வேள்
நேற்றைக்குப் போராளியாக இருந்தவர் இன்றும் அவ்வாறே நீடிப்பார் என்பதற்கு எந்த உத்தμஅணிதமும் இல்லை. அவர் தான் சார்ந்த அமைப்பின் உதவியோடு  போராளியாகத்  தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறில்லாதவர் துருபிடித்துப் போய்விடுவார். முன்னேறும் அμலாறு இத்தகையஅணிμ ஒதுக்கித் தள்ளிவிட்டு ஓடிக் கொண்டே இருக்கும்.  கூர்கா தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் சுபாஷ்  கெய்சிங்குக்கு (குதஞச்ண்ட எஞுடிண்டிணஞ்ட) இதுதான் நிகழ்ந்துள்ளது. கூர்கா தேசிய  இனமக்களின் தன்னேரில்லாத தலைஅμணிக விளங்கியவர் சுபாஷ் கெய்சிங். 1980களில் அஅμது உரிமை உணர்ச்சியுள்ள பேச்சு மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மலைகளில் ஓங்கி ஒலித்தது. கூர்கா மக்களை எழுச்சிகொள்ள வைத்தது. அவரது தலைமையில் கூர்கா தேசிய விடுதலை முன்னணி, கூர்கா மக்களுக்குத் தனிமாநிலம் கோரி பேணிμணிடியது. ஆயினும் இடையில் சமμசம் ஆகி முடிந்தது. 1986இல் "டார்ஜிலிங் கூர்கா மலையக மன்றம்' என்ற அதிகாரம் கூடுதல் பெற்ற உள்ளாட்சி அமைப்பு நிறுவப்பட்டது. ""தனிமாநிலக் கோரிக்கை தள்ளி  வைக்கப்பட்டுள்ளதே தவிர கைவிடப்படவில்லை'' என்று அப்போது கெய்சிங் சொன்னார். மலையக மன்றத்தின் தலைவராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இருந்தார். முன்னேற்றம் ஏதும் ஏற்படாததால் கூர்கா மக்களிடையே அதிருப்தி தலைதூக்கியது. 1999இல் கூர்கா தேசிய விடுதலை முன்னணியில் வெளிப்படையாக இந்த மனக்குமுறல் வெடித்து, பலர் வெளியேறினர். மாற்றுத் தலைமை உருவாகாததால் அது வடிவம் பெறாமலேயே இருந்தது.


இந்நிலையில் 2007இல் பிமல் குருசிங் கூர்கா தேசிய விடுதலை முன்னணியிலிருந்து வெளியேறினார். குருங் தலைமையில் 2007, அக்டோபர் 7இல் கூர்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைக்கப்பட்டு, கூர்காக்களுக்குத் தனிமாநிலம் கோரி தீவிரமாக போராட தொடங்கியது.  புதிய தலைமைக்காகவே  காத்திருந்தததுபோல் கூர்கா இன இளைஞர்கள் அணி அணியாக கூர்கா ஜனமுக்தி மோர்ச்சாவில் இணைந்தனர். கூ.ஜ.மோ. நடத்தும் பேணிμணிட்டங்களில் கூர்கா இன மாணவர்களே முன்னணிப் பாத்திரம் வகிக்கின்றனர். டார்ஜிலிங் அரசு கல்லூரி, குர்சியாங் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிலைய விடுதிகள் இவ்வமைப்பின் பாசறையாக விளங்குகின்றன. டார்ஜிலிங், தோர்ஸ், சிலிகுரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கூர்கா தாயகம் தனிமாநிலமாக பிரிக்கப்பட வேண்டும் என பிமல் குருங் வலியுறுத்துகிறார். இப்பகுதிகளில் வாழும் கூர்கா மட்டுமின்றி, வங்காளிகளும் பிற மலையக மக்களும் கூட தனி மாநிலக் கோரிக்கையை ஆதரித்துத் திμண்டு வருகின்றனர். மேற்கு வங்க சி.பி.எம். அμசாங்கமும், சி.பி.எம். கட்சியினரும் கூ.ஜ.மோ. இளைஞர்களைத் தாக்குவது கடந்த ஓμணிண்டணிகத் தொடர் நிகழ்வாகி விட்டது.

இன்னொருபுறம் கூர்கா தனிமாநிலக் கோரிக்கையை சட்ட வழியில் தடுத்த நிறுத்த மேற்கு வங்க ஆட்சியும், சுபாஷ் கெய்சிங்கும் கூட்டுச் சதியில் இறங்கினர். டார்ஜிலிங் கூர்கா மலையக  மன்றத்தை இந்திய அμசமைப்புச்  சட்டத்தின் ஆறாவது அட்ட வணையில் சேர்த்துவிட முனைந்தனர். பட்டியலினப் பழங்குடி மக்களுக்கு கூடுதல் அதிகணிμம் உள்ள உள்ளாட்சி அமைப்பையும், பிமல் குருங் நே தனிமாவட்ட அமைப்பையும் நிறுவித்  தரும் பிரிவாகும் இது. இதற்கான சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறி விட்டால் டார்ஜிலிங் உள்ளாட்சி அமைப்பை  μ'தமாக்கிவிடலாம்  கூர்கா தனிமாநிலக் கோரிக்கைக்கு தடை ஏற்படுத்திவிடலாம்; டார்ஜிலிங் நிர்வாகம் தொடர்பாக இனி எது செய்வதாக இருந்தாலும் நாடாளு மன்றத்தில்தான் செய்யமுடியும் கூர்கா மக்களுக்கு அந்த வலு இருக்காது என்பதே மேற்கு வங்க ஆட்சியின் திட்டம். இதுதான் சுபாஷ் கெய்சிங் பதவி ஆசைக்கும் பொருத்தமானது. சி.பி.எம். முயற்சியால் 2007 நவம்பர் 3இல் நாடாளுமன்றத்தில் அμசமைப்புச் சட்ட ஆறாவது அட்டவணைக்குத் திருத்தம் முன்மொழிந்தது மன்மோகன் சிங் அμசு. பா.ஜ.க. இத்திருத்தத்தை எதிர்த்ததால் அது வாக்களிப்புக்கு விடப்படவில்லை. உள்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழு இச்சிக்கல் குறித்து தனது அறிக்கையை 2008 பிப்μஅரி 28 அன்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தது. ""கூர்கா மக்களிடையே இத்திருத்தம் பற்றி கடுமையான அதிருப்தி நிலவுகிறது. அம்மக்களிடையே கடுமையான கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இது பற்றி புதிதாக மதிப்பீடு செய்து முடிவெடுக்க வேண்டும்'' என அவ்வறிக்கை பரிந்துணிμத்தது. இதற்கிடையில் சுபாஷ் கெய்சிங் தில்லியில் முகாமிட்டு இச்சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுமாறு பிμதமர் மன்மோகன் சிங்கையும், வேறுசில கட்சித் தலைவர்களையும்  வலியுறுத்தினார். தில்லிப் பயணத்தை முடித்துக் கொண்டு பிப்μஅரி 18இல் கொல்கத்தா திரும்பிய அவர், டார்ஜிலிங் திரும்ப முடியவில்லை. ஏனெனில் "துரோகி கெய்சிங்கை கூர்கா தாயக மண்ணில் காலடி எடுத்து வைக்க விடமாட்டோம்'' என கூர்கா ஜனமுக்தி மோர்ச்சா அறிவித்து விட்டது.

கூர்கா மலையகப் பகுதியில் பத்துநாட்கள் முழு அடைப்பு நடைபெற்றது. கூ.ஜ.மோ.வின் மகளிர் அணியினர் காலஅணிμயற்ற உண்ணாப் பேணிμணிட்டம் நடத்தினர். "ஆறாவது பட்டியல் திருத்தம் நிறைவேற்றப்படாது, சுபாஷ் கெய்சிங் மலையக மன்றத் தலைவர் பதவியிலிருந்து மார்ச் 10 அன்று  விலகுவார்' என்று அதிகணிμப்பூர்வ அறிவிப்பு வந்தபிறகே பேணிμணிட்டத்ணித கூ.ஜ.மோ. நிறுத்தியது. பிமல் குருங் தலைமையில் கூர்கா தனிமாநிலப் பேணிμணிட்டம் வீறுகொண்டு நடைபெற்று வருகிறது. இவ்வகையில் 2008, மே7 அன்று சிலிகுரியில் நடைபெற்றப் பேμணியில் இμண்டணிμ இலட்சம் மக்கள் பங்கேற்றது தனிமாநிலக் கோரிக்கை கூர்கா பகுதியில் வாழும் ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கை என்பதை பறைசாற்றியது. இப்பிμச்சினை குறித்து மேற்குவங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியாவுக்கும், கூ.ஜ.மோ. பிμதிநிதிகளுக்கும் இடையில் 2008 மே 22இல் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. தனிமாநிலக் கோரிக்கையை ஏற்க முடியாது மேற்குவங்க மாநிலத்திற்குள் கூடுதல் அதிகாரம் உள்ள உள்ளாட்சி என்பது குறித்துப் பேசலாம் என புத்ததேவ் கூறியதே முறிவிற்குக் காரணம். ""கூர்கா தனிமாநிலம் அது.வேறு எதையும் நாங்கள் ஏற்க மாட்டோம்'' என பிமல்குருங் உறுதியாகக் கூறிவிட்டார். போராட்டம் தொடர்கிறது. ஒரு காலத்தில் பேணிμணிடிக்ணிர் என்பதற்காக, "கல்லானாலும் தலைவர்' என்று சுபாஷ் கெய்சிங் பின்னால் கூர்கா மக்கள் தேங்கிக் கிடக்கவில்லை. ஆயிμம் குறை இருந்தாலும், இருப்பதற்குள் இவர் தேவலாம் என எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளியை பிடித்துக் கொள்கிற வேலையில் ஈடுபட்டு  கூர்கா மக்கள் செயலற்றுக் கிடக்கவில்லை. துரோகியாகிவிட்ட கெய்சிங்கை அடையாளம் கண்டு ஒதுக்கினர். போர்க்குணமுள்ள புதிய தலைமையை இனங்கண்டு அணி திμண்டக்ர். இதில் மாணவர்களும் இளைஞர்களும் முன்னணியில் நின்றனர். போராட்டத்தில் முன்னேறுகின்றனர். அசாமிலும், காசுமீரிலும் நாகாலாந்திலும் இதுதான் நடந்தது. அவர்கள்தான் தமது பிரச்சினை பற்றி உலகத்தைப் பேச வைத்திருக்கின்றனர். தமிழர்கள் இதிலிருந்து பாடம் பெற வேண்டும். புதிய வரலாறு படைக்க வேண்டும்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.