ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழகத்திலேயே சி்ங்களனிடம் உதைபடம் திருப்புர் தொழிலாளர்கள்

தமிழகத்திலேயே சி்ங்களனிடம் உதைபடும்
திருப்புர் தொழிலாளர்கள்
கோ.மாரிமுத்து

திருப்பு+ர் அவிநாசி சாலையிலுள்ள திருமுருகன்பு+ண்டியிலிருந்து 6 கி.மீ. தொலைவிலுள்ளது பொங்குபாளையம் ஊராட்சி. இதில் காளம்பாளையம் என்ற ஊரில் மெரிடியன் பனியன் நிறுவனம் 1100 தொழிலாளர்களுடன் இயங்குகிறது. இதில் 400 பேர் மட்டுமே தமிழர்கள். 100 கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளில் 9 பேர் மட்டுமே தமிழர்கள். பொது மேலாளர் சமீன்தா பண்டார நாயக்கா சிங்களன்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, நிறுவன உணவகத்தில் ஒரிசாவைச் சேர்ந்தவர்களுக்கும் தமிழர்களுக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. தாக்குதலுக்குக் காரணமான ஒரிசாவினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பொது மேலாளரிடம் தமிழர்கள் புகார் சொல்லியிருக்கிறார்கள். புகாரை வாங்க மறுத்ததுடன் தமிழர்களை முழுமையாக வீட்டுக்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டி ஒரிசாவினர் முன்னிலையிலேயே தமிழர்களை தாக்கியிருக்கிறான் பண்டாரா. பொது மேலாளர் தமக்கு சாதகமாக இருக்கிறார் என்று தெரிந்தவுடன் ஒரிசாவினர் ஒட்டுமொத்தமாக தமிழர்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள். இதில் 30 தமிழர்கள் படுகாயமடைந்துள்ளார்கள்.

பண்டாராவையும் வெளிமாநில அதிகாரிகளையும் நீக்க வேண்டும் எனற கோரிக்கையுடன் தமிழ்த் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கம் 3 முறை நிர்வாகத்துடன் பேச்சு நடத்தியது. உடன்பாடு ஏற்படாததால் அவிநாசி நேதாசி ஆயத்த ஆடை தொழிற்பு+ங்கா முன்பு 400 தொழிலாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ஆத்திரமுற்ற நிர்வாகம் ஒட்டுமொத்த தமிழர்களையும் வேலை நீக்கம் செய்யும் உள் நோக்கத்துடன் கதவடைப்பு செய்துவிட்டது.

சமீன்தா பண்டாவால் முதலில் பவழிவாங்கப்பட்டவர் அந்த பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்ற தமிழர். பிறகு ரெங்கசாமி ஒரு மாதம் முன்பு சிவா என்று அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்திருக்கிறான். பிழைக்க வந்த இடத்தில் இந்த மண்ணின் மக்களை அடித்துத் துன்புறுத்தும் அளவிற்கு வடநாட்டான் உளவியல் உறுதி பெற்றிருக்கிறான் என்றால் நாம் எந்தளவு சொரணையற்று இருக்கிறோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

வெளியார் சிக்கல் என்பது திருப்பு+ரில் வெளிப்பட்டு இருக்கிறது. கோவை, ஈரோடு, திருப்பு+ர் போன்ற ஊர்களில் ஏற்கெனவே மூன்றில் ஒருவன் மலையாளி. இப்போது மிகை எண்ணிக்கையில் வடநாட்டுக்காரர்கள். இப்படி வெளியார்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தமிழகம். தமிழர்களின் தாயகமாக இல்லாமல் இனக்கலப்பு மாநிலமாக ஆகிவருகிறது. இதைத்தான் விரும்புகிறது இந்தியா. சுற்றுலா விசாவில் வந்து விதிகளுக்கு கட்டுப்படாமல் தமிழ்நாட்டில் தமிழர்களை அச்சுறுத்தும் சிங்களன் மேல் நடடிவடிக்கை ஏதுமில்லை. மாறாக இப்பிரச்சினையில் வெளியாரின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தச் சென்ற பெ.தி.க. தோழர்கள் 33 பேரை கைது செய்திருக்கிறது தமிழக அரசு. பிரச்சினை என்ன என்று விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக கதவடைப்பு செய்ய நிர்வாகத்திற்கு துணை போயிருக்கிறது அரசு. தமிழர்களைத் தாக்கிய சமீன்தா பண்டார நாயக்காவை மெரிடியன் நிர்வாகம் வேலை நீக்கம் செய்ய வேண்டும். அவனைக் காவல்துறை கைது செய்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளியார் சிக்கல் குறித்துத் தமிழர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.

2 comments:

  1. http://tamilnet.tv/
    தமிழனுக்கு என்ன 2 குன்னையும் 4 கொட்டயுமா இருக்கு
    முடிகிட்டு இரூ கொட்டயா கலகிருவம்

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.