ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கோவையில் வழக்கறிஞரைத் தாக்கியக் காவல்துறையினரைக் கைது செய்யக் கோரி தொடர் முற்றுகைப் போராட்டம்!


வழக்கறிஞர் ஆனந்தீசுவரன் தன் கட்சிக்காரர் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்திருப்பதை அறிந்து, கோவை துடியலூர் காவல் நிலையம் சென்றார். அங்கிருந்த, உதவி ஆய்வாளரிடம் இது தவறு என எடுத்துரைத்தார். ஆனால், அந்த ஆய்வாளரும், அங்கிருந்த காவலர் களும் வழக்கறிஞர் கூறிய ஞாயங்களை செவிமடுக்காமல் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

பின், அதிகார வெறியுடன் வழக்கறிஞர் ஆனந்தீசுவரன் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தினர். படுகாயமடைந்த ஆனந்தீசு வரன் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார். காவல்துறை யினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்டதை அறிந்த வழக்கறிர்கள் துடிய லூர் காவல் நிலையத்தை முற்று கையிட்டனர்.

தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறை யினரை கைது செய்ய வலியுறுத்தித் தொடர் போராட்டங்களை நடத்தினர். ஆனால், அவர்களை பணியிடை நீக்கம் மட்டும் செய்தார் காவல் கண்காணிப்பாளர்.

இந்நிலையில், வழக்கறிஞரைத் தாக்கிய காவல் துறையினரைக் கைது செய்யக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்திற்கு முன் தொடர் முற்றுகைப் போராட்டத்தை வழக்கறிஞர்கள் அறி வித்து நடத்தி வருகின்றனர்.

12 நாட்களாக நடந்து வரும் வழக்கறிஞர்களின் முற்றுகைப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பா.தமிழரசன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். காவல்துறையினரை தமிழக அரசு கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திப் பேசினார்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.