தமிழ்த் தேசியமும் சர்வத்தேசியமும் இணைய வேண்டும் தி.க.சி. மடல்
அருமைத் தோழர் மணியரசன் அவர்களுக்கு,
வணக்கம். 8.10.11 சனிக்கிழமை மாலையில், பேராசிரியர் அறிவரசன் என்னைச் சந்தித்தார்; தமிழினத் தற்காப்பு மாநாட்டில் தோழர் பா.செயப் பிரகாசம் தலைமையில் நிகழ்ந்த, ‘வாழ்நாள் சாதனையாளர் பாராட்டுக்கள’த்தில், இலக்கியத் துறையில் சாதனைக்காகத் தாங்களும், தங்கள் இயக்கமும் எனக்கு வழங்கிய விருது, பரிசு மற்றும் பாராட்டுப் பொருள்களைத் தோழர் அறிவரசன் எனக்கு வழங்கினார்.
மிகுந்த பெருமையுடனும், தன்னடக்கத்துடனும், பூரிப்புடனும் அவற்றை ஏற்றுக் கொண்டேன்; உளம் மிக நெகிழ்ந்தேன்; அவ்வமயம், என் உணர்ச்சிகளைத் தெரிவிக்க, என்னிடம் சொற்கள் இல்லை! தங்களுக்கும், தமிழ்த் தேசிய உரிமைகளுக்காக அயராது போராடும் தங்களது அமைப்புக்கும், ஏட்டுக்கும், செயற்குழுவினருக்கும், ஆதர வாளர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி; தலை தாழ்ந்த வணக்கம்.
அக்டோபர் 1-15 தமிழர் கண்ணோட்டம் இதழ் பெற்றேன். “புதிய பாய்ச்சல்! புதிய வீச்சு!” எனும் முகப்பு அட்டை முழக்கத்திற்கு ஏற்ப, தமிழர் கண்ணோட்டம் ஒவ்வொரு இதழும், புதிய ஆயத் தங்களுடன், புதிய புதிய படைப்பாளிகளின் பன்முகப் படைப்புகளுடன் வெளிவரும் என நம்புகிறேன். புதியதோர் உலகம் செய்யத் தங்கள் இதழுடன், எல்லாவகையிலும் ஒத்துழைப்பேன்; தமிழ்த் தேசியமும் சர்வதேசியமும் இணைந்த விடுதலைப் பாதை யில் மக்களை அணி திரட்டு வது, ஒன்றுபடுத்துவதே, இன் றைய நமது உடனடிக் கடமை யாகும்.
என்றும் தோழமையுடன்,
தி.க.சி., நெல்லை.
Leave a Comment