ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

யாழ் பல்கலை மாணவர்களை விடுவிக்கக் கோரி சென்னையில் சிங்களத் தூதரகம் முற்றுகையிடப்பட்டது!

P1060778
சனநாயக வழியில் போராடிய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்து சிறைபடுத்தியுள்ள சிங்கள அரசு, அவர்களை விடுவிக்க வேண்டும் எனக் கோரி போர்க்குறறம் – இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பு சார்பில், சென்னையிலுள்ள சிங்களத் தூதரகம் இன்று(30.01.2013) காலை முற்றுகையிடப்பட்டது.

போராட்டத்தை, அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் இரா.திருமலை ஒருங்கிணைத்தார். அனைத்திந்திய மாணவர் பெருமன்ற தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் வெங்கட்ராமன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர் கோபிநாத், தமிழ்நாடு மக்கள் கட்சி செயற்குழு உறுப்பினர் தோழர் அருண்சோரி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், தந்தை பெரியார் தி.க ஊடகத்துறை பொறுப்பாளர் சரவணன், மாநில இளைஞரணி செயலாளர் இராஜ்குமார், வழக்கறிஞர் கயல்விழி, தோழர் தியாகு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சாலையை மறித்து மறியலில் அமர்ந்த தோழர்களுடன், காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஆனர். முடிவில், 70க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு, காவல்துறை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு செல்லப்ட்டனர். பின்னர் மாலை விடுவிக்கப்பட்டனர்.
P1060781
P1060806
P1060836
P1060842
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : பாலா)

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.