ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

முருகன்குடியில் எழுச்சியுடன் நடைபெற்ற தழல் ஈகி முத்துக்குமார் வீர வணக்க பொதுக்கூட்டம் !



ஈழத்தமிழர் இன்னுயிர் காக்க தன்னுயிர் ஈந்த தழல் ஈகி முத்துக்குமார்–ன் 5ம் ஆண்டு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.

30.01.2014 வியாழன் மாலை 7 மணி அளவில் பெண்ணாடம் வட்டம் முருகன்குடி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் முருகன்குடி கிளைச் செயலாளர் தோழர் இரா.கனகசபை தலைமையேற்றார்.

தமிழக இளைஞர் முன்னணி தோழர் சி.பெரியார்ச்செல்வன், தமிழக உழவர் முன்னணியின் பொறுப்பாளர் தோழர் வீ. முருகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக வீரவணக்க எழுச்சி முழக்கங்களுக்கு இடையே
தழல் ஈகி கு.முத்துக்குமார் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

சாத்துக்கூடல் தே.இளநிலா குழுவினரின் தப்பாட்ட பறைமுழக்கம் அரங்கம் அதிர அறங்கேறியது.

தமிழக இளைஞர் முன்னணியின் நடுவண் குழு உறுப்பினர் தோழர்
சி.பிரகாசு வரவேற்று பேசினார்.

தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.முருகன், பெண்ணாடம் கிளைச் செயலாளர் தோழர் கு.மாசிலாமணி, தமிழக உழவர்முன்னணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்தோழர்மு.இராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.

தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை எழுச்சிமிகு வீரவணக்க உரையாற்றினார்.

நிறைவாக த.இ.மு துறையூர் கிளை பொறுப்பாளர் தோழர் மு.பொண்மணிகண்டன் நன்றி கூறினார்.

மாணவர்கள், பொதுமக்கள், உணர்வாளர்கள் என பல்வேறு அமைப்புத் தோழர்களும் இதில் திரளாக கலந்து கொண்டனர்.

தழல் ஈகி முத்துகுமாருக்கு வீரவணக்கம் !



No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.