தமிழர் மரபு அறிவியல் பேராளர், சூழலியல் போராளி அய்யா கோ.நம்மாழ்வார் அவர்கள் மறைவு! தோழர் பெ.மணியரசன் இறுதிவணக்கம்.
தமிழர் மரபு அறிவியல் பேராளர், சூழலியல் போராளி அய்யா கோ.நம்மாழ்வார் அவர்கள் மறைவு! த.தே.பொ.க தலைவர் தோழர் பெ.மணியரசன் இறுதிவணக்கம்.
அய்யா கோ.நம்மாழ்வார் அவர்களின் உடல் இறுதி வணக்க நிகழ்விற்காக தஞ்சாவூர் , பாரத் கல்லுரியில் நேற்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அ.தி.மு.க அமைச்சர் வைத்தியலிங்கம், தி.மு.க திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவா, இந்திய கம்னியூஸ்ட் மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.னெடுமாறன் வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் உள்ளிட்ட பல்வேறு கட்சி அமைப்புகளின் முன்னணியாளர்கள், தோழர்கள், இயற்கை வேளாண் உழவர்கள், பேராசிரியர்கள் பொதுமக்கள் என திரளானோர் காலை முதல் இறுதி வணக்கம் செலுத்தினர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர் பெ.மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் நா.வைகறை, குழ.பால்ராசு, பொதுக்குழு உறுப்பினர்கள் கு.சிவப்பிரகாசம், விடுதலை சுடர், தமிழக இளைஞர் முன்னணி தலைவர் தோழர் கோ.மாரிமுத்து, துணைப்பொதுச் செயலாளர் தோழர். ஆ.குபேரன், மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே.சுப்பிரமணிய சிவா, தமிழக உழவர் முன்னணி பொறுப்பாளர்கள் திரு. அ.மதிவாணன், திரு தங்க.கென்னடி திரு.சரவணன், திரு என். செயராமன், மகளிர் ஆயம் தோழர் இலட்சுமி, தோழர் ம.காந்திமதி, ஆ.யவனராணி, த.இ.மு தாம்பரம் நகர செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், த.இ.மு நடுவண் குழு உறுப்பினர் தோழர் மாவீரன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க தோழர்கள் வீரவணக்க நிகழ்வில் பங்கேற்றனர்.
அய்யா நம்மாழ்வார் அவர்களின் இறுதி நிகழ்வு அவருடைய இயற்கை வேளாண்மை மற்றும் வாழ்வியல் மையமான வானகத்தில் இன்று (1.1.2014 ) பகல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
Leave a Comment