முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க மதகுகளை உடனே இறக்குக ! தமிழக உழவர் முன்னணி கோரிக்கை
உச்ச நீதிமன்றத்
தீர்ப்பின் படி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க மதகுகளை உடனே இறக்குக ! தமிழக உழவர் முன்னணி
கோரிக்கை
இது குறித்து தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் தோழர் கி. வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்கிக் கொள்ளலாம் எனவும்
கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையைக்
கைப்பற்றி இடிக்கும் நோக்கத்துடன் நிறைவேற்றிய அணைகள் பாதுகாப்புச் சட்டம் செல்லாது
எனவும், உச்ச நீதிமன்றம் இன்று (7.05.2014) அளித்துள்ள தீர்ப்பை தமிழக
உழவர் முன்னணி வரவேற்கிறது.
உடனடியாக முல்லைப்பெரியாறு அணையில் மதகுகளை 142
அடி நீர் தேக்கும் வகையில் இறக்குமாறு தமிழக பொதுப்பணித்துறைக்கு ஆணையிடுமாறு
தமிழக அரசை தமிழக உழவர் முன்னணி வலியுறுத்துகிறது,
இல்லையேல் 2006 –ல் தீர்ப்பு வந்தபோது செயல்படாததால் ஏற்பட்ட
இழப்பை மீண்டும் சந்திக்க நேரிடும்.
ஆகவே தமிழக அரசு போர்க்கால
அடிப்படையில் செயல்பட்டு அணையின் மதகுகளை இறக்கி 142 அடி நீர் தேக்க
நடவடிக்கை எடுக்குமாறு தமிழக உழவர் முன்னணி கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Comment