ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்மொழிப் போர் ஈகியரின் வரலாற்றை பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் - தோழர் பெ.மணியரசன் பேச்சு

தமிழ்மொழிப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்தவர்களின் வரலாற்றை பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றார் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ. மணியரசன்.

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றம் சார்பில், மொழிப்போர் தியாகங்களும், மொழிக்கொள்கைகளும் என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

தமிழ்மொழி போல், தமிழர்கள் போல் உலகில் வேறு எந்த நாட்டினரும் தங்களுடைய தாய்மொழியை காக்க இப்படி போராட்டம் நடத்தியது கிடையாது. ஹிந்தி ஆட்சிமொழியாக வந்தால், தமிழுக்கு அழிவு வரும் என்ற பயம்தான் ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களுக்கு காரணம். அந்த போராட்டத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டில் பலர் பலியாயினர். பலர் தமிழ் மொழியை காக்க தங்களின் உயிரை தியாகம் செய்தனர்.

வங்கமொழிக்கான போராட்டத்தில் 4 பேர் மட்டுமே உயிர் துறந்தனர். அவர்களின் முயற்சியால் அந்த தினம் உலகம் முழுவதும் நினைவுதினமாக ஐநா சபை அறிவிப்பால் கொண்டாடப்படுகிறது.
ஆனால், 300 பேர் உயிர்துறந்த தமிழ்மொழிப் போராட்டம் நமது பாடத்திட்டத்தில்கூட இடம்பெறவில்லை. இந்த போராட்டம் கண்டிப்பாக நமது பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும். தியாகிகளும், தியாகங்களும் மதிக்கப்பட, போற்றப்பட வேண்டும் என்றார் மணியரசன்.

நிகழ்ச்சிக்கு முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்ற நிர்வாகி திரு நா.வெற்றியாழகன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார், திரு.பேரா.முனைவர் பெ.இராமலிங்கம் முன்னிலை வகித்தார், செல்ல கலைவாணன் தலைமை வகித்தார் மற்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டத் செயலாளர் தோழர் குழ.பால்ராசு ஒன்றிய செயலாளர் தோழர் பழ.இரசேந்திரன் ,தமிழக இளைஞர் முன்னணி துனைத்தலைவர் தோழர் காமராசு மற்றும் த.தே.பொ.க ,த.இ.மு தோழர்களும் தமிழின உணர்வாளர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.
===========================

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.