பெட்ரோலிய விலைக்கு தமிழ்நாடு ஏன் பலியாக வேண்டும்!
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.69, டீசல் லிட்டருக்கு 50 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோலிய பொருட்கள் விற்பனையால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்வதற்காக டீசல் விலையை மாதந்தோறும் உயர்த்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதேபோல், சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல் விலையும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் 69 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. அந்தந்த மாநிலங்களின் வரி விகிதத்திற்கு ஏற்ப விலை உயர்வு மாறுபடும்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. ரூபாய் மதிப்பும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விலை உயர்த்தப்பட்டிருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன.
பெட்ரோலிய விலைக்கு தமிழ்நாடு ஏன் பலியாக வேண்டும்!
தமிழகத்தில் நரிமணம், அடியக்கமங்கலம், கமலாபுரம், கோயில் களப்பாள், புவனகிரி ஆகிய இடங்களில் உள்ள பெட்ரோலிய உற்பத்தி நிலையங்களையும் நரிமணம், பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையையும், குத்தாலம் எரிவளி ஆலையையும் தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசைக் கேட்க வலியுறுத்த வேண்டும். இவை கிடைத்தால் மலிவு விலையில் பெட்ரோலியப் பொருள்களைத் நாம் வாங்க முடியும்.
பற்றாக்குறையை ஈடுகட்ட வெளிநாடுகளிலிருந்து பெட்ரோலியம் இறக்குமதி செய்து கொள்ளும் உரிமையை வழங்குமாறும் இந்திய அரசை வலியுறுத்தி வேண்டும். இந்த உரிமைப் போராட்டத்திற்கு நாம் ஆயத்தமாக வேண்டும்.
பற்றாக்குறையை ஈடுகட்ட வெளிநாடுகளிலிருந்து பெட்ரோலியம் இறக்குமதி செய்து கொள்ளும் உரிமையை வழங்குமாறும் இந்திய அரசை வலியுறுத்தி வேண்டும். இந்த உரிமைப் போராட்டத்திற்கு நாம் ஆயத்தமாக வேண்டும்.
Leave a Comment