மக்களை மதிக்காத ஒஎன்ஜிசி : எரிவாயு எடுக்கும் பணியை கண்டித்து உண்ணாவிதம்

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே திருநகரியில் ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த வருடம் 5 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்தி ஆழ்துளைக் கிணறு அமைத்து எரிவாயு எடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்கு அப்பகுதி கிரம மக்கள் ஆறுமாதமாக தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்தும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையே ஓஎன்ஜிசி நிறுவனம் மக்கள் எதிர்ப்பை மதிக்காமல் கடந்த எரிவாயு எடுக்கும் பணியை காவல்துறை பாதுகாப்போடு மேற்கொண்டு வருகிறது. இதனை கண்டித்து கிராம மக்களுடன்  மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு, சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபம் முன்பாக உண்ணாவிரதம் நடைப்பேற்றது.

இவ் உண்ணாவிரதத்திற்கு ஊராட்சித் தலைவர் கலையரசி தலைமையேற்றார்.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் முனைவர் செயராமன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ. மணியரசன் உள்ளிட்டோர் கண்டண உரையாற்றினர்.
இவ்வுண்ணாவிரதத்திற்கு 300க்கும் மேற்பட்ட கிரம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related

பெ. மணியரசன் 2761916261187135497

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

emo-but-icon

அனைத்து இதழ்களையும் படிக்க

புத்தக வடிவில் படிக்க

புத்தக வடிவில் படிக்க
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்

தினம் ஒரு குறள்

தமிழகம்

தமிழீழம்

அதிகம் பார்த்தவை

தேடுக

செய்தித் தொகுப்பு

item