இலங்கை மனித உரிமை மீறல் : ஐ.நா. விசாரணை குழுவுக்கு விசா வழங்க மோடி அரசு மறுப்பு


இலங்கையின் மனித உரிமை மீறல் புகார் குறித்து விசாரிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை நியமித்த விசாரணை குழுவுக்கு விசா வழங்க போடி அரசு மறுத்துவிட்டது. 

இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. குழு விசாரணை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்தியா உள்ளிட்ட இதர 4 தெற்காசிய நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

தீர்மானத்தின் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை கடந்த 7 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த ஐ.நா. விசாரணை குழுவை நியமித்தார். 

இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்த உள்ள இந்த ஐ.நா. குழுவில் 13 உறுப்பினர்களும், 3 நிபுணர்களும் உள்ளனர்.

இந்த ஐ.நா. விசாரணை குழு இந்தியாவுக்குள் வந்து விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து அவர்களுக்கு விசா வழங்க இந்தியா மோடி அரசு மறுத்துவிட்டதாக இலங்கை மனித உரிமை ஆணையர் பிரதிபா மகாணமாஹெவா கூறியுள்ளார்.

இதனால் ஐ.நா. விசாரணை குழு தெற்காசிய நாடுகளுக்கு வெளியில் விசாரணையை நடத்த முடிவு செய்துள்ளது.  உலகளவில் நியூயார்க், பாங்காக், ஜெனீவா ஆகிய 3 இடங்களில் மையங்களை அமைத்து அங்கிருந்து இலங்கையில் உள்ள சாட்சிகளிடம் இணையதளம், செயற்கைகோள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் மூலம் விசாரணையை நடத்தி வருகிறது.

இந்தியாவில் எந்த ஆட்சியாக இருந்தாலும் தமிழினத்திற்கு எதிரான போக்கை மட்டுமே எடுப்பார்கள் என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது ஆரிய இந்தியா மோடி அரசு.

Related

செய்திகள் 1800322075556855562

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

emo-but-icon

அனைத்து இதழ்களையும் படிக்க

புத்தக வடிவில் படிக்க

புத்தக வடிவில் படிக்க
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்

தினம் ஒரு குறள்

தமிழகம்

தமிழீழம்

அதிகம் பார்த்தவை

தேடுக

செய்தித் தொகுப்பு

item