ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கச்சத்தீவில் மீன்பிடிக்க தமிழர்களுக்கு உரிமை இல்லை : இந்திய அரசு



கச்சத்தீவில் மீன்பிடிக்க தமிழர்களுக்கு உரிமையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்கவேண்டும் என்று கோரி மீனவர் பேரவை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஏற்கனவே ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அளித்த பதில் மனுவில் தமிழக மீனவர்களுக்கு எதிரான கருத்தை கூறியிருந்த நிலையில், தற்போது புதிதாக பதவியேற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மோடி அரசும் புதிதாக கூடுதல் பதில் மனுவை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க உரிமையில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. 

கடந்த 1974 ஆம் ஆண்டில் தமிழக மீனவர்களின் கருத்தை அறியாமலேயே கச்சதீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது இந்திய அரசு. அதன் பலனாக 600க்கும் மேற்பட்ட நமது மீனவர்களை பாரத மாதா பலிபீடத்திற்கு கொடுத்திறுக்கிறோம்.

இந்நிலையில் இந்திய அரசு மீண்டும் இப்படி சொல்லியிருப்பதன் மூலம் தமிழர்களின் பகை இந்தியா என்பது மீண்டும் உறிது செய்துள்ளது

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.