தமிழ்த் தேச இறையாண்மையும் வெளியாரை வெளியேற்றலும் - தமிழ்த்தேசியன்
ஒருவர்
உண்மையான தமிழ்த் தேசியரா, குழப்ப
மில்லாத தமிழ்த் தேசியரா என்பதைக்
கண்டறிவதற் கான சிறந்த உரைகல்
அவர் அயலார் ஆக்கிரமிப்பு பற்றி
என்ன கருத்து வைத்துள்ளார் என்பதாகும்.
தமிழ்த்
தேசம் தமிழர்களின் தாயகம். தமிழர்கள் மிகப்
பெரும்பான்மையாகக் காலம் காலமாக வாழ்ந்து
வருவதால் தான் இது தமிழ்த்
தேசமாக நீடிக்கிறது. அயல் இனத்தார் பெரும்பான்மை
ஆகிவிட்டாலோ அல்லது தமிழர்களின் எண்ணிக்கைக்கு
சமமாக அயலார் வந்துவிட்டாலோ இது
தமிழ்த் தேசமாக நீடிக்காது.
இப்போது
உலகில் பெரும்பாலும் அந்தந்தத் தேசிய இனத்திற்கு அந்தந்தத்
தாயகம் என்ற வரையறை இருக்கிறது.
தேச அரசு உருவாக்கத்திற்கானப் போராட்டம்
(Nation State Formation) 18, 19 ஆம் நூற்றாண்டுகளில்
ஐரோப்பாவில் கிளர்ந்தெழுந்தது. இன்று கிட்டத்தட்ட இருநூறு
நாடுகள் இருக்கின்றன. தேச அரசு உருவாக்கப்
போராட்டம் ஐரோப்பாவிலேயே இன்னும் முற்றுப் பெறவில்லை.
பிரித்தானியாவிலிருந்து பிரிந்து போக அயர்லாந்தும், ஸ்காட்லாந்தும்
போராடிக் கொண்டிருக்கின்றன. ஸ்காட்லாந்தில் தனிநாடு குறித்துக் கருத்து
வாக்கெடுப்பு நடத்த பிரித்தானியா ஒப்புக்
கொண்டுள்ளது. ஸ்பெயினிலிருந்து பிரிந்து போக கட்டலோனா போராடிக்
கொண்டிருக்கிறது. கட்டலோனாவில் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்
போவதாகக் அம் “மாநில” அரசு,
தன் விருப்பப்படி அறிவித்துள்ளது. அதாவது ஸ்பெயின் மற்றும்
ஐ.நா. பார்வையாளர்
இன்றி அது தானே கருத்து
வாக்கெடுப்பு நடத்தப் போகிறது.
தேச
அரசின் வரைவிலக்கணம் என்ன? ஒரு பொது
மொழி பேசும் மக்கள் காலம்
காலமாக வாழ்ந்து வரும் தாயகப் பகுதி
தான் தேசம். அது தனக்கான
அரசுடன் விளங்குவது தேச அரசு ஆகும்.
பழங்குடிகள் அதிகமாக வாழுமிடங்களில் பழங்குடிகளின்
மூல இனத்தின் அடையாளத்தைக் கொண்டு தேசம் அமைகிறது.
(எ.டு.) ஜார்கண்ட், நாகாலாந்து
போன்றவை.
ஐரோப்பாவில்
உருவான தேச அரசுகள்- இறையாண்மைக்
கோட்பாட்டை வலுப்படுத்தின; வளர்த்தன. குறிப்பிட்ட தேசத்தில் எவ்வகையான ஆட்சி இருப்பது, சமூக
அமைப்பு இருப்பது என்பதை அந்தந்த தேச
மக்களே முடிவு செய்வர். அடுத்த
தேசத்தார் அதில் தலையிடக் கூடாது.
ஒரு தேசத்தை இன்னொரு தேசம்
ஆக்கிரமிக்கக் கூடாது. குடியுரிமை வழங்கும்
அதிகாரம் அந்த தேசத்திற்கு மட்டுமே
உண்டு. பிற தேசத்தவர் அந்த
தேசத்தின் அனுமதி இல்லாமல் அதற்குள்
நுழையக் கூடாது. குடியேறக் கூடாது.
இதற்காகக் கடவுச்சீட்டு (பாஸ் போர்ட்டு) நுழைவுச்
சீட்டு (விசா) ஆகியவை உருவாக்கப்பட்டன.
இப்பொழுது
அரபு நாடுகளிலும், ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச்
சேர்ந்தவர்கள் பலர் வேலைக்குப் போகிறார்கள்.
அவர்களில் சிலர் அந்நாடுகளின் குடியுரிமை
பெறுகிறார்கள். இதெல்லாம் எப்படி நடக்கிறது? அந்த
நாடுகளின் உள்நாட்டு மக்களால் நிறைவு செய்ய முடியாத
பணிகளில் வெளி நாடுகளிலிருந்து தங்களுக்குத்
தேவைப்படும் திறமை உள்ளவர்களைத் தேர்வு
செய்து வரவழைத்துக் கொள்கிறார்கள்.
கடவுச்சீட்டு
- நுழைவுச் சீட்டு அடிப்படையில் இத்தேர்வுகள்
நடக்கின்றன. பிழைப்புத் தேடும் பிறநாட்டவர்க்கு வேலை
கொடுக்க வேண்டும் என்ற கருணையினால் எந்த
நாடும் அயல் நாட்டார்க்கு வேலை
கொடுப்பதில்லை. அந்நாட்டின் தேவையினால் வேலை கொடுக்கிறார்கள். தேவை
முடிந்து விட்டால், பிற நாட்டார்க்கு வேலை
கொடுக்க மாட்டார்கள். திருப்பி அனுப்பி விடுவார்கள்.
கடந்த
சில ஆண்டுகளாக மேலை நாடுகளில் பொருளாதார
மந்த நிலை ஏற்பட்டுள்ளதால் வெளிநாட்டிலிருந்து
வந்து வேலை பார்ப்பவர்களைப் படிப்படியாக
வெளியேற்றும் நிலையில் அல்லது வெளி நாட்டவரை
அனுமதிப்பதைக் குறைத்துக் கொள்ளும் நிலையில் அவை இருக்கின்றன, அரபு
நாடுகளில், வெளி நாட்டவர் களைத்
திருப்பி அனுப்புகிறார்கள். அமெரிக்க ஐக்கிய நாட்டில் வேலைக்கு
வெளிநாட்டவரை அழைப்பதற்கு கடந்த சில ஆண்டுகளாக
வரம்பு கட்டிவிட்டார்கள்.
இறையாண்மை
உள்ள நாடுகள், அயல் இனத்தாரை அனு
மதிப்பதற்கு இத்தனை கட்டுப் பாடுகளை
வைத்துள்ளன. அளந்து அனுமதிக்கிறார்கள், அவ்வாறே
வெளியேற்றுகிறார்கள். ஏன்? ஏனெனில் அந்த
நாடு ஒரு குறிப் பிட்ட
இனமக்களின் தாயகம். முழுக்க முழுக்க
அந்த இனத் தார்க்கு மட்டுமே
உரியது. அயல் இனத்தார் மக்கள்
தொகை பெருகி, அந்த நாடு
பல இனங்களின் தாயகமாக மாறிவிடக் கூடாது
என்ற முன்னெச்சரிக்கையே இந்தக் கட்டுப்பாடுகளுக்கு அடிப்படைக்
காரணம். பிறநாடுகளில் மக்கள் கொடிய வறுமையில்
வாடுகிறார்கள்- வேலையில்லா திண்டாட்டத்தில் அல்லலுறுகிறார்கள்; அவர்களுக்கு வேலை கொடுக்க, அவர்கள்
வறு மையைப் போக்க - நம்
நாட்டில் அழைத்துக் கொள்வோம் என்று எந்த நாடும்
வெளியாரை அனும திப்பதில்லை.
பிற
நாடுகளில் நிலவும் வறுமை மற்றும்
வேலையில்லாத் திண் டாட்டத்தின் மீது
கருணை ஏற்பட்டால் அந்நாட்டிற்கு நிதி உதவி, பொருளுதவி
செய்யும் நாடுகள் இருக்கின்றன. அதற்காக
அந்நாட்டு மக்களை வரைமுறை யின்றித்
தங்கள் நாட்டுக்குள் நுழைய விடமாட்டார்கள். சில
வல்லரசு நாடுகள் இவ்வாறான உதவிகள்
செய்யும் வழியாக அந் நாடுகளில்
தங்கள் பொருளாதார - அரசியல் ஆதிக்கத்தை நிலை
நாட்டிக் கொள்வதும் உண்டு. எந்த வகையிலும்
பிற நாட்டினரை வகை தொகையின்றித் தங்கள்
நாட் டிற்குள் திமுதிமு வென அனுமதிப் பதில்லை.
பாட்டாளி வர்க்க சர்வதேசியம் பேசிய
சோவியத் ஒன்றியம், சீனம் போன்ற நாடுகள்
- உண்மையான கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளின் ஆட்சியில் இருந்த போதும் வெளியார்
நுழைவு குறித்தக் கட்டுப்பாடுகள் இருந்தன. இப் போது கியூபா,
வியட்நாம், வட கொரியா போன்ற
கம்யூனிஸ்ட்டு நாடுகளில் வெளியார் நுழைவுக்கு எதிராகக் கடும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
வெளியார்
நுழைவு குறித்து உலக அளவில் நாடுகள்
கடை பிடிக்கும் கட்டுப்பாடுகள் தமிழ்த் தேசத்திற்குத் தேவையா
இல்லையா? தேவை என்கிறது தமிழ்த்
தேசப் பொதுவுடைமைக் கட்சி. தமிழ்நாட்டிற்குள் அயல்
இனத்தார் நுழைந்து வேலைபார்ப்பதற்கு எந்தக் கட்டுப்பாடும் தேவை
இல்லை என்கிறார்கள் தோழர் பொழிலன், பாவலர்
தமிழேந்தி போன்றவர்கள்.
தமிழ்நாடு
ஏழு கோடி மக்கள் தொகை
கொண்டது. உலகில் முதலில் தோன்றிய
இனத்திற்கும் மொழிக்கும் தாயகம் தமிழ்நாடு தான்.
தனித்த வரலாறும் பண் பாடும் கொண்டு
பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக நிலையான
இனச்சமூகமாக விளங்குகிறது தமிழ்ச் சமூகம்.
எனவே,
தனிநாடாக விளங்குவதற்கு, எந்த தேசத்தையும்விடக் கூடுதல்
தகுதி பெற்றது தமிழ்நாடு என்கிறது
தமிழ்த் தேசப் பொது வுடைமைக்
கட்சி.
தனிநாடாக
ஆனபின் உலக நாடுகளின் ஏற்பிசைவுடன்
சட்டப் படியான இறையாண்மை (De
Jure Sovereignty) தமிழ்நாட்டிற்குக்
கிடைக்கும். அப்போது மலையாளிகள், தெலுங்கர்கள்,
இந்திக்காரர்கள் உள்ளிட்ட அயலாரைத் தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு
கட வுச் சீட்டு - நுழைவுச்
சீட்டு வரை முறைகளைத் தமிழ்நாடு
கடை பிடிக்கும். அதற்கு அந்த சட்டப்
படி யான இறையாண்மையானது அதி
காரம் தரும். ஆனால் அதற்கு
முன், தமிழக விடுதலைக்குப் போராடு
வோர், தங்களால் கடைபிடிக்க இயன்றவரையில் நடைமுறை
அடிப்படையில் ஓர் இறையாண்மையை (De
Facto Sovereignty) கடைபிடிப்பர்.
நடைமுறை இறையாண்மை என்பது உலகத்தில் கடை
பிடிக்கப்படுகின்ற ஒரு கோட்பாடு தான்.
இந்தியாவுக்குள்
உள்ள அயல் இனத்தாராக இருந்தாலும்
இந்தி யாவுக்கு வெளியே உள்ள அயல்
இனத்தாராக இருந்தாலும் தமி ழகம் இந்த
நடைமுறை இறையாண் மையைக் கடைபிடிக்க
வேண்டும் என்கிறது தமிழ்த் தேசப் பொதுவு
டைமைக் கட்சி. தமிழ்த் தேச
விடுத லையைத் தாங்களும் கோருவதாகக்
கூறிக் கொள்ளும் பொழிலனும் தமிழேந்தியும், மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள், இந்திக்காரர்கள், ஒரியர்கள், வங்காளிகள் இன்னும் பிற அயல்
இனத்தார் அனைவரும் எந்தக் கட்டுத் திட்டமும்
வரம்பும் இல்லாமல் திமுதிமுவென்று தமிழ்நாட்டிற்குள் புகுந்து தமிழ் மக்களுக்குரிய வேலை
வாய்ப்பு களை கைப்பற்றிக் கொள்வதை,
இங்கேயே அவர்கள் நிரந்தரமாகத் தங்குவதை
வரவேற்கிறார்கள். அவர்களுக்குக் குடும்ப அட்டை, வாக்காளர்
அட்டை அனைத்தும் வழங்க வேண்டும் என்
கிறார்கள். அவர்களுக்குக் குடும்ப அட்டையும் வாக்காளர்
அட்டையும் வழங்கினால் அவர்கள் நிரந்தரமான தமிழகக்
குடிமக்கள் ஆகிவிடு வார்கள். அவ்வாறு
அயல் இனத் தார் தொகை
பெருகினால் தமிழகம் தமிழர் தாயகமாக
நீடிக்காது. கலப்பினத் தாயகமாக மாறிவிடும் என்று
கவலைப்படுகிறது, எச்சரிக் கிறது தமிழ்த் தேசப்
பொதுவுடை மைக் கட்சி.
இதற்காகத்
த.தே.பொ.க.விற்கு இனவெறிக்
கட்சி என்று பட்டம் சூட்டுகின்றனர்
பொழிலனும், தமிழேந்தியும்! தமிழேந்தி இன்னும் கீழிறங்கி, த.தே.பொ.க.வை அரம்பத் தனக்
கட்சி என்கிறார். (தென் மொழி - பிப்ரவரி
2014, உழைக்கும் மக்கள் தமிழ்கம் ஏப்ரல்
- மே 2014)
உலகத்தில்
தேச விடுதலைக் காகப் போராடும் எந்த
அமைப்பா வது, தங்கள் தேசத்தில்
அயல் இனத்துத் தொழிலாளிகள் வரை முறையின்றிக் குடியேறிக்
கொள்ளலாம் என்று அனுமதிக்கிறார்களா? பொழிலனுக்கும்
தமிழேந்திக்கும் பிடித்தமான சொற்கோவையுடன் கேட்போம்; “சிங்களப் பாட்டாளிகளைத்’’ தமிழீழத்தில் குடியேற அனுமதித்தார்களா விடுதலைப்
புலிகள்? “சிங்களப் பாட்டாளி களைத்” தமிழீழத்தில் குடியேற
விடுதலைப்புலிகள் அனுமதிக் காததைக் கண்டித்துப் பொழிலன்
திறனாய்வு செய்ததுண்டா? இல்லை! சிங்களப் பாட்டாளி
களைத் தமிழீத்தில் அனுமதிக்கக் கூடாது என்பது த.தே.பொ.க
நிலைபாடு.
“.... சிக்கல்களை ஏற்படுத்தும்
பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்திய அரசின்
சூழ்ச்சிகளை இவ்வகையில் விளங்கிக் கொள் ளாமல், தமிழகத்தில்
உள்ள பிற மொழியினரை வகுப்பு
(வர்க்க) அளவில் வேறு பிரித்து
அடையா ளப்படுத்தி மறுக்க வேண்டிய உணர்வின்றிச்
சகட்டு மேனிக்குப் பிற மொழியினரையெல்லாம் வந்தேறிகள்
என்பதும், 1956- க்குப் பின்னர் வந்த
அனைவரையும் வெளியேற்றுவோம் என்பதும், அவர்களுக்கெல்லாம் பங்கீட்டு (ரேசன்) அட்டை தரக்
கூடாது, இந்திய அடையாள (ஆதார்)
அட்டை தரக் கூடாது என்பதும்
என்ன வகையில் தமிழ்த் தேச
அரசியலாக இருக்க முடியும்?’’ என்று
கேட்கிறார் பொழிலன். (தென்மொழி - பிப்ரவரி 2014)
என்ன
வகையிலான தமிழ்த் தேச அரசியல்
என்றால் உண்மை யான தமிழ்த்
தேச அரசியல் இதுதான்; போலியான
தமிழ்த் தேச அரசியல் த.தே.பொ.க.விடம் இல்லை என்பது
தான் நமது விடை! பிற
மொழியினரை “சகட்டு மேனிக்கு வந்தேறிகள்’’என்று த.தே.பொ.க. சொல்வது
பொழிலனுக்கு நிரம்பவும் வலியை
உண்டாக்கியிருக்கிறது போலும்!
கர்நாடகத்தில்
அப்பாவித் தமிழர்களைக் கன்னடர்கள் தாக்கிய போதும், கேரளத்தில்
அப்பாவித் தமிழர்களை மலையா ளிகள் தாக்கிய
போதும் இவ்வா றான “வலி”
பொழிலனுக்கு ஏற்பட் டதாகத் தெரிய
வில்லையே!
அவர்கள்
எல்லாம் வந்தேறிகள் அல்லாமல் தமிழ்த் தேசக் குடி
மக்கள் என்கிறாரா பொழிலன்?
“அசாமில்
மார்வாடிகளை விரட்டும் போதும், காசுமீரத்தில் நுழைந்திருந்த
“பண்டிட்டு’’களை யும் சீக்கியர்களையும்
விரட்டிட முழக்கங்கள் இடும் போதும் கூட
“இந்திய நாய்களே வெளியேறுங் கள்’’,
“இந்தியாவே வெளியேறு” என்று தான் முழக்கமிட்டார்
களேயன்றி குறிப்பிட்ட பிற மொழித் தேசங்களை
அவர்கள் பகையாக்கிக் கொள்ளவில்லை என்பதை அறிய வேண்டும்,’’
என்கிறார் பொழிலன். (மேலது)
“இந்திய
நாய்களே’’, என்பது நாகரிமான சொல்லாடலா?
“நாய்’’ என்று அழைக்காது நாகரிகமாகவே,
அயலார், வெளியார் என்று த.தே.பொ.க. அழைத்து
வருகிறது. “வந்தேறிகள்’’ என்ற சொல்லாடலைப் பெரும்பாலும்
மார்வாடி, குசராத்தி சேட்டுகளைக் குறிக்கப் பயன்படுத்தியிருக்கிறது. தமிழ் நாட்டை ஆக்கிரமிக்கும்
எந்த அயல் இனத்தாரையும் அவர்கள்
முதலாளிகளாக இருந்தாலும் தொழிலாளிகளாக இருந்தாலும் வந்தேறிகள் என்று சொல்லுவது குற்றமில்லை.
மலையாளிகள், இந்திக்காரர்கள், வங்காளிகள் என்று இனப்பெயர் சுட்டாமல்
“இந்தியர்களே’’என்று கூறுங்கள் என்கிறார்
பொழிலன். அதைச் சொல்ல வந்தவர்தான்
‘இந்திய நாய்களே வெளியேறுங்கள்’ என்ற
மேற்கோளை கையாண்டார். ‘இந்தியர்’ என்று யாருமே இல்லை
என்பதுதான் த.தே.பொ.க.வின் நிலைபாடு.
“தமிழ்த்
தேச உருவாக்கத்தை, அதன் எழுச்சியைச் சிதைக்கும்
நோக்கத்தில் இயங்கும் இந்திய - பன் னாட்டு நிறுவனங்களை
எதிர்க்கா மல் எய்யும் அம்புகளை
நொந்து கொள்வது எதிரியை எதிர்ப்பதாகுமா?’’
என்று பொழிலன் கேட்கிறார்.
இந்திய
- பன்னாட்டு நிறுவனங் களை எதிர்த்துப் பொழிலன்
போராட்டம் நடத்திக் கொண்டி ருப்பது போலவும்,
அதை மடை மாற்றி, த.தே.பொ.க.
அயல் இனத் துப் பாட்டாளிகளை
எதிர்க்கச் சொல்வது போலவும் இருக்கிறது
அவரது திறனாய்வு! இந்திய - பன்னாட்டு நிறுவனங்களை எதிர்க் கப் பொழிலனிடம்
உள்ள வேலைத் திட்டம் என்ன?
அதன் அடிப்படையில் அவர் இப்பொழுது நடத்திக்
கொண்டிருக்கும் போராட்டம் என்ன!
திறனாய்வு
என்ற பெயரில் தமிழ்த் தேசியத்திற்கு
எதிரான சீர்குலைவுக் கருத்துகளை எழுதிக் கொண்டிருப்பதைத் தவிர
உருப்படியான வேலைத் திட்டம் எதையும்
பொழிலன் முன்வைக்க வில்லை.
உலகமயம்,
தாராளமயம் என்ற பெயரில் தமிழ்நாட்டில்
குவிக்கப் பட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களை, இந்திய நாட்டு நிறுவனங்களைத்
தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று த.தே.பொ.க. தொடர்ந்து
குரல் கொடுத்து வருகிறது. மார்வாடி, குசராத்தி சேட்டுகள் நிறுவனங்கள், மலையாளிகளின் பெருநிறுவனங் கள் ஆகியவற்றை வெளியேற்றக்
கோரி அவற்றின் முன் மறியல் போராட்டங்கள்
நடத்தி நூற்றுக் கணக்கான த.தே.பொ.க. தோழர்கள்
பல தடவை சிறைப்பட்டுள்ளார்கள்,
தளைப்பட்டுள்ளார்கள்.
“எதிரியை
எதிர்க்காமல் அவர் கள் எய்யும்
அம்புகளை நொந்து கொள்ளலாமா’’ என்று
கேட்கிறார். எதிரிகளையும் எதிர்க்கிறோம்- தமிழர் மீது பாயும்
அம்புகளையும் தடுக்கிறோம்.
எதிரி
அம்பு எய்தால் - அந்த அம்புகளைத் தடுத்து
முறியடிப்பது தான் போர் முறை;
அம்புகளை விட்டு விடுங்கள் எதிரியை
மட்டும் தாக்குங்கள் என்றால் அது என்ன
போர் முறை!
தமிழினத்திற்கு
ஆதரவு போல் காட்டிக் கொண்டு,
அம்பை விட்டுவிடுங்கள் என்று அறிவுரை கூறுவது
எதிரியின் வெற்றிக்கு வழி தேடும் உத்தியல்லவா?
அதைத் தான் பொழிலன் செய்கிறார்.
தமிழ்த் தேசம் கலப்பினங்களின் தாயகமாக
மாறுவது பற்றிய கவலை அவருக்கு
எள்ளளவும் இல்லை.
இந்தியா,
இந்திய அரசு ஆகிய இரண்டைப்
பற்றியும் தவறாக வரையறுக்கிறார் பொழிலன்.
“பொருளியல்
சுரண்டலுக்காக அரசதிகாரத்தை நிறுவுகிற இந்தியா, தன் அரசதிகாரத்தின் வழி
பல்வேறு மொழித் தேசங்களின் மொழியை,
பண்பாட்டை, வரலாற்றை பிற அனைத்து உரிமை
களையும் படிப்படியாக நசுக்குவதும் அழிப்பதுமாக இருக்கிறது. இந்தி யப் பண்பாடு,
இந்திய வரலாறு என ஆரியப்
பார்ப்பனியப் பண்பாட்டையும் அதன் வரலாற்றையுமே காக்கவும்,
வளர்க்கவும் பரப்பவும் செய்கிறது’’ என்கிறார் பொழிலன். (மேலது)
இந்திய
அரசு பற்றிய வரைய றுப்பை
எவ்வளவு தவறாகச் செய் துள்ளார்
பொழிலன்! அவர் கருத்துப்படி இந்திய
அரசு, இந்தி மொழி உள்ளிட்ட
இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளையும்
நசுக்குகிறது! நசுக்கப்படும் பட்டிய லில் இந்தியையும்
அவர் சேர்க்கி றார். அவ்வாறு சேர்க்கவில்லை
எனில், இந்தியை இந்திய அரசு
இந்தி அல்லாத எல்லாத் தேசிய
இனங்களின் மீதும் திணிக்கிறது என்ற
உண்மையை ஏன் இதில் கூறவில்லை?
இந்தி
ஆதிக்கத்தைச் சுட்டிக் காட்ட மறுப்பது ஏன்?
இதில் என்ன கமுக்கம் இருக்கிறது?
இந்தியாவில்
உள்ள தேசிய ஒடுக்குமுறையின் தன்மை
என்ன? எந்த ஒரு தேசிய
இனமும் மற்ற தேசிய இனங்கள்
மீது ஆதிக்கம் செலுத்தவில்லை என்பது சி.பி.எம்., சி.பி.ஐ., மா.லெ.கட்சிகளின் வரையறுப்பு. அந்த வரையறுப்பில் தான்
பொழிலன் இருக்கிறார்.
இந்தி
தேசிய இனம் ஒரு மொசைக்
தேசிய இனமாக உருவாகியுள்ளது. இந்தி
என்பது சமற்கிருதத்தின் குழந்தைவடிவமாக ஆரியப் பார்ப்பனர்களாலும், வட
நாட்டுப் பெருமுதலாளிகள், அரசியல்வாதிகள், இந்துத்துவா ஆற்றல்கள், மார்வாடி, குசராத்தி சேட்டுகள் போன்றவர்களாலும் பார்க்கப்படுகிறது. இந்தி தனிப் பட்ட
எந்த இனத்திற்கும் தாய் மொழியாக இல்லாவிட்டாலும்
உ.பி.,, பீகார்,
ம.பி., ,உத்தரகாண்ட்
உள்ளிட்ட பல மாநிலங்களிக்கு இந்தி
தான் கடைதெருப் பேச்சு மொழி, - கல்வி
மொழி, அலுவல் மொழி! இவ்வாறாக
ஒரு மொசைத் தேசிய இனமாக
இந்தி தேசிய இனம் உருவாகியிருக்கிறது.
இந்தி பேசுவோர் இந்தியாவில் தனிப் பெரும்பான்மையாக உள்ளனர்.
இந்தி பேசுவோர் இந்துத்துவாவுக்கு நெருக்கமாக உள்ளனர். இந்தி மண்டலத்தை பசு
மாட்டு வட்டாரம் (புனிதப் பசு - வழிபாடு)
என்று அழைப்பது உண்டு.
இப்பெரிய
இந்தி பேசும் தேசிய இனத்தினரை,
இந்தியப் பெரு முதலாளிகள் அரவணைத்துக்
கொள்கின்றனர். அவர்களின் மொழியை, இந்துத்துவாவை ஆதரிப்
பதின் வழியாக அவர்களை இந்தியப்
பெருமுதலாளிகள் அரவணைத்துக் கொள்கின்றனர்.
இந்திய
அரசு என்பது பெரு முதலாளிகள்
தலைமையில் இயங் கும் முதலாளிய
- ஆரியப் பார்ப்ப னிய - இந்தி
தேசிய இன ஆதிக்க அரசு.
இது ஏகாதிபத்திய அரசாக வளர்ச்சியுற்று வலுப்பெற்றது.
இந்திய அரசைப் பற்றிய த.தே. பொ.க.
வரையறுப்பு இது தான்! (த.தே.பொ.க.
கொள்கை அறிக்கை நான்காம் பதிப்பு
பக்கம் - 13)
இந்தியாவில்
இந்தி மொழி ஆதிக்கம் இருக்கிறது.
இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து
1938 முதல் தமிழர்கள் போராடி வருகிறார்கள். 1965 இல்
நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப்
போராட்டத்தில் தமிழ கத்தில் 300 பேர்க்கு
மேற்பட்டோர் ஆட்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இராணுவம்
வரவ ழைக்கப்பட்டுத் துப்பாக்கிச் சூடு நடந்தது.
தமிழ்நாட்டில்
உள்ள இந்திய அரசு நிறுவனங்களில்
வேலைக் கான தேர்வுகள் இந்தி
அல்லது ஆங்கிலத்தில் நடக்கின்றன. இந்தி மொழி பேசும்
வடநாட்டு தலித், பழங்குடி மற்றும்
பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கள் மொழியில் தேர்வெழுதிக்
கூடுதல் மதிப்பெண்
பெற்று தலித், பழங்குடி மற்றும்
பிற்படுத்தப்பட்ட தமிழர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை
அபகரித்துக் கொள்கிறார்கள். மொழி மற்றும் இன
அடிப்படையில் இந்தி மற்றும் இந்தி
தேசிய இனத்தின் ஆதிக்கமும் சுரண்டலும் ஒடுக்கு முறையும் இந்தியாவில்
இருக்கிறது.
எல்லாத்
தேசிய இனங்களையும் இந்திய அரசு ஒடுக்குகிறது
என்பது முழு உண்மையன்று. இந்தித்
தேசிய இனத்தின் ஒடுக்கு முறையையும் சுரண்டலையும்
மறைப்பதற்காகச் சொல்லப்படும் வாதம் ஆகும்.
“தமிழ்த்
தேச விடுதலைப் புரட்சிக்கு, இந்தியாவில் ஒடுக்கப் பட்டுள்ள மற்ற இனங்களின் ஆதரவு
தேவை அல்லவா, அவர்களை “வெளியாரை
வெளியேற்ற வேண்டும்’’ என்று பேசினால் எப்படி
ஆதரிப்பார்கள்’’ என்று கேட்கிறார் பொழிலன்.
அந்த ஒடுக் கப்பட்ட இனங்கள்
நடத்தும் விடுதலைப் புரட்சிக்குத் தமிழர்கள் ஆதரவும் தேவை தானே!
விடுத லைக்குப் போராடுவோர் ஒருவர் மற்றவரை ஆதரிக்க
வேண்டிய தேவை இருக்கிறது. அப்போராட்
டம் வரும்போது அது நடக்கும். பொழிலன்
கூறுவது போல் அயல் இனத்தவர்கள்
தங்கு தடையில்லா மல் தமிழ்நாட்டில் நிரம்பி
விட்டால், அதன்பிறகு தமிழகத்தில் விடுதலைப் புரட்சி எழ வாய்ப்பே
இருக்காது. அண்டை இனங்கள் விடுதலைப்
புரட்சி செய்து, தமிழ்நாட்டைப் பங்கு
போட்டுக் கொள்ளும். இது தான் பொழிலன்
விருப்பமா?
பிற
மாநிலங்களில் தமிழர்கள் பிழைக்கப் போயிருக்கிறார்களே, அவர்கள் கதி என்னாவது
என்று கேட்கிறார் தமிழேந்தி. பிற மாநிலங்களின் தேவை
அடிப் படையில் உழைப்பாளிகளாகத் தமிழர்கள்
போயிருக்கிறார்கள். தொழில், வணிகம், மொழி
ஆகிய வற்றில் அத்தமிழர்கள் அங்கு
ஆதிக்க ஆற்றல்களாக இல்லை. ஒரு வேளை
அங்குள்ள தமிழர்களை அத்தேசிய இனங்கள் வெளியேற் றினால்
தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றப்படும் அயல் இனத் தார்
நடத்திய தொழில், வணிகம், வேலை
ஆகியவற்றை, தாய்த் தமிழகம் திரும்பும்
தமிழர்களுக்கு வழங்கலாம். அவ்வாறு வழங்கி னால்
வெளி மாநிலங்களில் அல்ல லுற்றதை விட
செழிப்பாகவே தாய் மண்ணில் தமிழர்கள்
வாழ்வார்கள்.
தமிழ்நாட்டில்
தமிழ்த் தேசிய இனம் எழுச்சி
பெற்று நின்றால் அயல் மாநிலங்களில் தமிழர்கள்
மீது கை வைக்க அஞ்சுவார்கள்
என்பதே உண்மை. பிற தேசங்களில்
வாழும் தமிழர்களின் மதிப்பு கூடும்.
வெளி
மாநிலங்களிலிருந்து வந்துள்ள தொழிலாளர்களை வெளியேற்றுவது மாந்த நேயமல்ல என்று
தமிழேந்தி பேசுகிறார். ( உழைக்கும் மக்கள் தமிழகம் – ஏப்ரல்
– மே – 2014 ) வீடில்லாமல் தெருவில் வசிக்கும் ஏழைகளைத் தங்கள் வீட்டில் ஒரு
பகுதியைப் பகிர்ந்து கொள்ளச் சொல்வாரா தமிழேந்தி?
தமிழ்த் தேசம் தன் இனத்தின்
வீடு என்ற உணர்வில்லாதவர்கள்
தாம் இவ்வாறான “பகட்டு மாந்த நேயம்”
பேசுவர்.
நாம்
எந்த இனத்தாரையும் தாக்க வில்லை; துன்புறுத்தவில்லை.
எந்த அயலார் சொத்தையும் அபகரிக்கவில்லை.
எங்கள் மண்ணில் எங்களுக்கே
இட மில்லை; இலட்சக்கணக்கான தமிழ்
மக்கள் சாலை ஓரங்களில், சாக்கடை
ஓரங்களில், மரத்தடிகளில் வாழ்கிறார்கள். எங்கள் மண்ணில் எங்கள்
மக்களுக்கே வேலை இல்லை; தமிழக
வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலை கேட்டுப் பதிவு
செய்துள்ளோர் 80 இலட்சம் பேர். எனவே,
உங்களுக்கு வழங்க எங்க ளிடம்
உபரியாக நிலம் இல்லை, வளம்
இல்லை. நீங்கள் திரும்பிப் போய்
விடுங்கள் என்று கூறுவது குற்றமா?
உங்கள் தாயகத்தில் உங்கள் உரிமைக்குப் போராடுங்கள்.
உங்கள் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று
சொல்வது குற்றமா?
தமிழகத்திற்கு
மிகக் குறைவான நிலப்பரப்பே உள்ளது.
70,000 ச.கி.மீ. வரை
தமிழர் மண்ணை ஆந்திரம், கர்நாடகம்,
கேரளம் ஆகிய மாநிலங்கள் அபகரித்துக்
கொண்டன.
தமிழக
மக்கள் தொகை 7,21,00,000 நிலப்பரப்பு 1,30,058 ச.கி.மீ.
கர்நாடக மக்கள் தொகை 6,11,30,704 பரப்பளவு
1,91,791 ச,கி,மீ., ஆந்திரப்பிரதேசம்
மக்கள் தொகை 7,25,97,565 பரப்பளவு 2,75,069 ச.கி.மீ.
மத்தியப் பிரதேசம் மக்கள் தொகை 8,46,65,533 பரப்பளவு
3,08,000 ச.கி.மீ., ஒரிசா
மக்கள் தொகை 4,19,47,358 பரப்பளவு 1,55,707 ச.கி.மீ.,
குசராத் மக்கள் தொகை 6,03,83,628 பரப்பளவு
1,95,024 ச.கி.மீ. தமிழ்நாட்டின்
மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப
அதன் தாயகப் பரப்பு இல்லை.
தமிழ்
மக்களே, தாயக நிலத் திற்கும்
தண்ணீர்ருக்கும் தான் எதிர்காலத்தில் மிகப்
பெரும் போர்கள் நடக்கக் கூடிய
சூழல் உள்ளது. நமது தாயக
உரிமையைப் பாதுகாக்க விழிப் போடிருக்க வேண்டும்.
பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்பே
நம் முன்னோர் நமக்கு வைத்து விட்டுப்
போன “வீடு” தமிழகம்! அதை
அயலார் ஆக்கிரமிக்க அனுமதிக்காதீர்கள்!
இராபர்ட்
கிளைவ் துப்பாக்கி யும் பீரங்கியும் கொண்டு
- தமிழர் தாயகத்தைப் பறித்து இந்தியா வுடன்
இணைத்தான். இப்போது “இந்தியன்’’ என்ற போலி இனப்
பெயரைப் பயன்படுத்தி, இந்திக் காரர்களும் மற்ற
இனத்தார்களும் தமிழகத்தை ஆக்கிரமிக்கிறார்கள்.
“இந்தியன்’’என்ற பாசத்தை அப்புறப்படுத்த
முடியாதவர்கள் தமிழ்த் தேசியத்தின் பெயரால்
கூட தமிழ்நாட்டில் “இந்தியர்களுக்குப்’’ பங்கு கேட்டு வாதாடுவார்கள்.
ஏமாந்து விடாதீர்கள்!
அமெரிக்கக்
கண்டத்திற்குச் சொந்தக்காரர்கள் செவ்விந்தியர்கள் போன்ற பல பழங்குடிகள்.
அவர்களை அழித்தும் ஓரங்கட்டியும் அவர்களின் தாயகத்தைப் பறித்துக் கொண்டவர்கள் தாம் அமெரிக்க ஐக்கிய
நாடுகள் (யு.எஸ்.ஏ.),
கனடா உட்பட பல நாடுகளில்
ஆள்கிறார்கள். அந்தக் கதி
தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வந்துவிடக் கூடாது.
அன்றாடம்
வந்து குவியும் அயலாரைத் தடுக்க - வந்து குவிந்த வர்களை
வெளியேற்ற வாருங்கள் தமிழர்களே, ஒன்று சேர்வோம்! வழிமுறைகளைக்
காண்போம்!
இக்கட்டுரை,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2014 சூன் 16-30 இதழில் வெளிவந்தது.
Leave a Comment