ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பட்டீசுவரத்தில் ‘சமற்கிருத எதிர்ப்பு” தெருமுனைக் கூட்டம்!


இந்திய அரசின் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆகத்து 7 முதல் 13ஆம் நாள் வரை, ‘சமற்கிருத வாரம்’ கொண்டாட வேண்டுமென நரேந்திர மோடி தலைமையிலான பா.ச.க. அரசு உத்தரவிட்டுள்ளது. ஆரிய ஆட்சி நடத்தும் பா.ச.க.வின் இந்த முடிவுக்கு எதிராக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தமிழகமெங்கும் ‘சமற்கிருத எதிர்ப்பு வார’ நிகழ்வுகள் கடைபிடிக்கப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக, இன்று(07.08.2014) மாலை 6 மணியளவில், தஞ்சை மாவட்டம் - குடந்தை வட்டம் - பட்டீசுவரம் கடைவீதியில், ‘சமற்கிருத எதிர்ப்புக் கண்டனத் தெருமுனைக் கூட்டம்’ நடைபெற்றது. 

கூட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர் ம.தமிழ்த் தேசியன் தலைமையேற்றார். தோழர் இரா.சுரேசு (த.தே.பொ.க.) வரவேற்புரையாற்றினார். 

திரு. இறைநெறி இமையவன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திரு. பெ.பூங்குன்றன், தோழர் வளவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

தமிழக மாணவர் முன்னணித் தோழர் ம.புரட்சி நன்றியுரையாற்றினார்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.