ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மீத்தேன் திட்டத்தை எதிர்த்து மிதிவண்டி பரப்புரை சென்ற, தமிழக மாணவர் முன்னணித் தோழர்கள் கைது!


மீத்தேன் திட்டத்தை எதிர்த்து மிதிவண்டி பரப்புரை சென்ற, தமிழக மாணவர் முன்னணித் தோழர்கள் கைது!

தமிழக அரசின் இரட்டை வேடம் அம்பலம்!

காவிரிப்படுகையில் மீத்தேன் எடுக்கும் நாசகாரத் திட்டத்தை, தமிழ் மக்களிடம் பரப்புரை செய்யும் வகையில், இன்று(22.08.2014) முதல் மூன்று நாட்களுக்கு, தமிழக மாணவர் முன்னணி சார்பில் தஞ்சை மாவட்டம் - குடந்தை பகுதியில் மிதிவண்டி பரப்புரைப் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்படி, இன்று மாலை 6.30 மணியளவில், தமிழக மாணவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம.அருள் தலைமையில், பட்டீசுவரத்தில் பரப்புரைப் பயணத்தை தொடங்கிய மாணவர்கள் 12 பேரை, தற்போது காவல்துறையினர் கைது செய்து, பட்டீசுவரம் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

ஒருபுறம், மீத்தேன் திட்டத்தை எதிர்ப்பதாகக் கூறும் செயலலிதா அரசு, தனது காவல்துறை மூலம், மீத்தேன் திட்டத்தை எதிர்த்துப் பரப்புரை செய்யும் தோழர்களை கைது செய்கின்றது. செயலலிதா அரசின் இரட்டை வேடத்தையே இது அம்பலப்படுத்துகிறது.

கைது செய்யப்பட்ட அனைத்துத் தோழர்களும் மாலை 6.00 மணியளபில் விடுதலை செய்ய பட்டனர்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.