தூக்கு தண்டனை விதிக்கபட்ட 5 தமிழக அப்பாவி மீனவர்கள் விடுதலை!

தமிழக மீனவர்களை போதைப் பொருள் கடத்தியதாக பொய் குற்றஞ்சாட்டப்பட்ட 5 மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
ராமேசுவரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் பிரசாத், லாங்லெட், அகஸ்டஸ், எமர்சன், வில்சன் ஆகிய 5 பேரும் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றபோது சிங்கள இன வெறி கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போதை பொருட்கள் கடத்தியதாக சிங்கள இனவெறி கடற்படையினர் பொய் வழக்கை உருவாக்கினர். இதன் தொடர்ச்சியாக இலங்கை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 30ம் தேதி ஐந்து பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்தது.
தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் சிங்கள அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் போராட்டங்களில் குதித்தனர்.
தமிழகம் முழுவது பல்வேறு கட்ட போராட்டத்தின் அழுத்தத்தால் தீர்ப்புக்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இந்திய அரசு முடிவெடுத்து. 
இந்நிலையில், தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனு நேற்று திரும்ப பெறப்பட்டது. 
கொழும்பில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய இலங்கை அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் மோகன சமரநாயகே இந்த தகவலை உறுதி செய்தார். 
இதையடுத்து நிதிமன்றத்தில் நேர் நிறுத்தப் பட்டு மீனவர்கள் ஐவரும் விடுதலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். அதன்பிறகு அவர்கள் இலங்கை குடியுரிமை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். விரைவிலேயே இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஐவரையும் விரைவில் தமிழகம் அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related

தமிழக மீனவர்கள் 8288796231466004025

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

emo-but-icon

அனைத்து இதழ்களையும் படிக்க

புத்தக வடிவில் படிக்க

புத்தக வடிவில் படிக்க
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்

தினம் ஒரு குறள்

தமிழகம்

தமிழீழம்

அதிகம் பார்த்தவை

தேடுக

செய்தித் தொகுப்பு

item