ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மகளிர் சுய உதவிக்குழுக்களைக் கலைக்கும் இந்திய அரசுக்கு மகளிர் ஆயம் கண்டனம்!


மகளிர் சுய உதவிக்குழுக்களைக் கலைக்கும் இந்திய அரசுக்கு மகளிர் ஆயம்  ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா கண்டனம்!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:


மகளிர் சுய உதவிக்குழுக்களை இந்தியா முழுவதும் தடை செய்யத் திட்டம் உள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறைக்கான மத்திய அமைச்சர் மேனகா காந்தி அவர்கள் அறிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் அடித்தட்டு பெண்களின் வாழ்க்கையில் சேமிப்பு, பொருளாதார சுயசார்பு, கந்துவட்டியிலிருந்து விடுதலை, பெண்களுக்கான ஆளுமை வளர்ச்சி போன்ற பல வரவேற்கத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக டாஸ்மாக் மதுவிற்கு, குடும்பத்து ஆண்கள் அடிமையாக, குழந்தைகளின் பசிபோக்க, குழந்தைகள் கல்விபெற இம்மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மகளிர்க்கு உதவின என்பது ஓர் எதார்த்தமான உண்மையாகும்.

மத்திய அரசு மகளிர் வங்கிகளைத் தொடங்கி உள்ளதால், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தடை செய்யப்படும் என அமைச்சர் அறிவிதுள்ளார். மகளிர் சுய உதவிக்குழுக்கள் கூட்டுப் பொறுப்புடனும், கூட்டு உத்திரவாதத்துடனும் செயல்படுவதால் பெண்களுக்கு கடன்பெறுவது எளிதாகின்றது. மகளிர் வங்கித் திட்டத்தில் அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எந்த ஒரு சாமான்யப் பெண்ணாலும் கடன் பெறுவது, “கல்லில் நார் உரிப்பதாகும்”.

எனவே, மத்திய அரசின் “மகளிர் வங்கி”த்திட்டம், எந்த விதத்திலும் “மகளிர் சுய உதவிக் குழுக்கள்” திட்டத்திற்கு மாற்றாக முடியாது. மத்திய அரசின் மகளிர் சுய உதவிக் குழுக்களைத் தடை செய்யும் திட்டம் மகளிர் விரோதமானது! கண்டிக்கத்தக்கது!

இவ்வாறு தமது அறிக்கையில் தோழர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.