ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“இளைஞர்களின் எதிர்காலமும் தமிழ்த் தேசியமும்” சிறப்புப் பொதுகூட்டம்!


“இளைஞர்களின் எதிர்காலமும் தமிழ்த் தேசியமும்” தமிழ்த் தேசியப் பேரியக்கம் புதுச்சேரியில் நடத்திய எழுச்சிமிகு சிறப்புப் பொதுகூட்டம்! 
 

“இளைஞர்களின் எதிர்காலமும் தமிழ்த் தேசியமும்” என்றத் தலைப்பில் புதுவையில் தமிழ்த் தேசியப் பேரியகத்தின் சிறப்புப் பொதுக்கூட்டம் நேற்று(28.08.2015) மாலை எழுச்சியுடன் நடைபெற்றது.

வரலாற்றில் முற்போக்காளர்கள் புரட்சியாளர்களின் புகலிடமாக விளங்கிய சிறப்புமிகு புதுச்சேரி மண்ணில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் கால்பதித்து நடைபெற்ற முதல் நிகழ்வான, இப் பொதுக்கூட்டம் சிறப்புற நடைபெற்றது.

புதுச்சேரி சாரம் அவ்வைத்திடலில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, புதுச்சேரி தமிழ்த் தேசியப் பேரியக்கச் செயலாளர் தோழர் இரா.வேல்சாமி தலைமை தாங்கினார். தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் க.முருகன், க.விடுதலைச் சுடர், புதுவை தோழர்கள் மணி, மதியழகன், இராமகிருட்டிணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தோழர் வெ. கார்த்திகேயன் வரவேற்றுப் பேசினார்.

முன்னதாக, மூன்று தமிழர் உயிர் காக்க தன்னுயிர் ஈந்த - தழல் ஈகி செங்கொடிக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார். சிதம்பரம் தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி மாணவர்களின் சிலம்பாட்டமும், பெண்ணாடம் இளநிலா கலைக்குழுவினரின் பறையிசையும் காண்போரைக் கவர்ந்த நிகழ்வுகளாக அமைந்தன.

பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தமிழக இளைஞர் முன்னணி பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி, துணைப் பொதுச்செயலாளர் ஆ.குபேரன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

நிறைவில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர். பெ மணியரசன் அவர்கள் தமிழின இளைஞர்கள் எதிர்காலம் குறித்தும் தமிழ்த் தேசியம் குறித்தும் உணர்ச்சிமயமான உரையாற்றினார். தோழர் பெருமாள் நன்றி கூறினார்.
நிகழ்வில், திரளான இளைஞர்களும், பெண்களும், உணர்வாளர்களும் பங்கேற்றனர்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.