ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மொழிப்போர் 50 மாநாடு - குறும்படப் போட்டி




1965ஆம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் தமிழ்த் தேசிய எழுச்சியான, மொழிப்போரின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், 2016 - சனவரி 24 அன்று, சங்கம் வளர்த்த மதுரையில், “மொழிப்போர் - 50 மாநாடு” நடைபெறுகின்றது. 

மாநாட்டில் கருத்தரங்குகள், பா அரங்கம், கலை நிகழ்வுகள், ஒளிப்படக் கண்காட்சி, மொழிப் போர் ஈகியர் குடும்பங்கள் சிறப்பிப்பு என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

மாநாட்டையொட்டி, ‘மொழியின் முகங்கள்’ என்ற தலைப்பில் குறும்படப் போட்டி நடத்தப்படுகின்றது. 

(->) இப்போட்டியில், 15 வயதிலிருந்து 35 வயதுக்குட்பட்ட முப்பாலரும் பங்கேற்கலாம்.

(->) தமிழ்மொழி, தமிழர் அறம், வாழ்வியல், அறிவியல், பண்பாடு, கலை, வீரம் உள்ளிட்ட கூறுகளில் குறும்படம் அமைந்திருக்க வேண்டும்.

(->) 5 நிமிடத்திலிருந்து 8 நிமிடங்களுக்கு மிகாமல், உரைநடை அல்லது இசைச் சித்திர வடிவில் குறும்படங்கள் இருக்கலாம்.

(->) வி.சி.டி, டி.வி.டி.யிலோ அல்லது கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரியிலோ ஆக்கங்களை அனுப்பி வைக்க வேண்டும். 

(->) படங்கள் குறைந்தபட்சம் 200 எம்.பி.யிலிருந்து 500 எம்.பி.க்குள் இருக்க வேண்டும்.

(->) ஒருவர் எத்தனை படைப்புகளையும் அனுப்பலாம்.

(->) செல்பேசி ஒளிப்பதிவாகவோ அல்லது நவீனமான ஒளிப்படக்கருவி மூலம் படம் பிடிக்கப்பட்டதாகவோ இருக்கலாம்.

(->) குறும்படங்களோடு அப்படம் குறித்த சிறு குறிப்புகள், படைப்பாளி, தயாரிப்பாளர் பெயர், முகவரி, தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை ஒரு தாளில் எழுதி அஞ்சலாகவோ அல்லது மின்னஞ்சலிலோ அனுப்பித் தரலாம். ‘மொழிப்போர் 50 மாநாடு குறும்படப்போட்டி’ என்று குறிப்பிட்டு அனுப்பவும்.

(->) குழுவாய் இணைந்த படைப்புகள் என்றால், அக்குழு ஐந்து நபர்களுக்கு மிகாமல் இருத்தல் அவசியம். இயக்குநர் குறித்த விபரம் தனியே இணைக்கப்பட வேண்டும். 

(->) குழுவினருக்குச் சான்றிதழும், இயக்குநருக்கு சான்றிதழோடு பரிசுக் கோப்பையும் வழங்கப்படும். கல்லூரி மாணவ - மாணவியர் தங்களின் முதல்வர் (அ) துறைத்தலைவர் ஒப்புகையுடன் கூடிய கடிதத்தோடு படைப்புகளை அனுப்ப வேண்டும்.

(->) உங்கள் படைப்புகள் எங்களை வந்து சேர வேண்டிய கடைசி நாள் சனவரி 10, 2016. முடிவுகள் சனவரி 20, 2016 அன்று அறிவிக்கப்படும். முதல் பரிசினைப் பெறும் படைப்பு மாநாட்டு அரங்கில் பொதுமக்கள் முன்பாகத் திரையிடப்படும். 

(->) போட்டிக்கு அனுப்பப்படும் அனைத்துக் குறும்படங்களுக்கும் சான்றிதழ் உண்டு. தேர்வாகும் முதல் மூன்று படங்களுக்குப் பதக்கம், பரிசு, சான்றிதழும் உண்டு. மேலும் மூன்று படைப்புகளுக்கு ஆறுதல் பரிசுகள் சான்றிதழோடு வழங்கப்படும்.

(->) தமிழ்நாட்டைச் சேர்ந்த படைப்பாளிகள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும். 

(->) நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 

மாநாட்டுக்குழு,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்,
80-அ, நேதாஜி சாலை, மதுரை - 625 001. 
கைப்பேசி எண்கள்: 9443393733, 9443918095, 9443303903.
மின்னஞ்சல்: mozhippor50@gmail.com

போட்டியில், தமிழின உணர்வாளர்களும், கலை இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டு தம் ஆக்கங்களை அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்! 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.