அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகிட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தடையா ..? திருச்சியில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கம்!
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகிட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தடையா ..? திருச்சியில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கம்!
அனைத்துச் சாதியினர் அர்ச்சகராவது குறித்து அண்மையில் வெளிவந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், அதைத் தெளிவுபடுத்தும் நோக்கில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில், “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகிட உச்ச நீதிமன்றத் தீர்ப்புத் தடையா?” என்ற தலைப்பில், நேற்று (02.02.2015) மாலை, திருச்சியில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள இரவி சிற்றரங்கில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திருச்சி செயலாளர் பாவலர் நா. இராசாரகுநாதன் தலைமை தாங்கினார். முன்னதாக, தோழர் கே. இனியன் வரவேற்புரையாற்ற, பாவலர்கள் மூ.த. கவித்துவன், பொறியாளர் ப. மாதேவன் ஆகியோரின் பாவீச்சு வழங்கினர்.
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், அனைத்துச் சாதியினரும் அர்ச்சராக வேண்டுமென உச்ச நீதிமன்ற வழக்கில் தம்மை வாதியாக இணைத்துக் கொண்டு வாதாடிய “செந்தமிழ்வேள்விச் சதுரர்” திரு. மு.பெ. சத்தியவேல் முருகனார் ஆகியோர் சிறப்புமிகு கருத்துரை வழங்கினர்.
நிறைவில், திரு. ப. அன்புச்செல்வன் நன்றி நவின்றார். நிகழ்வில், திரளான தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தித் தொடர்பகம்,
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை.
பேச: 9841604017, 7667077075
முகநூல்: www.facebook.com/tha.ka.e.pe
முகநூல்: www.facebook.com/tha.ka.e.pe
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment