ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

புளியங்குடியில் தமிழ்த் தேசியப் பேரியக்க கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்! .

புளியங்குடியில் தமிழ்த் தேசியப் பேரியக்க

கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்!




தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், நெல்லை மாவட்டம் - புளியங்குடியில் 17.04.2016 அன்று மாலை, “கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்” நடைபெற்றது.

புளியங்குடி சாலைக்கிணறு கே.வி.கே. சாமி திடலில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, அய்யாபுரம் வட்டாரப் பொறுப்பாளர் தோழர் ச. முத்துப்பாண்டியன் தலைமை தாங்கினார். பேரியக்கத்தின் புளியங்குடி நகரச் செயலாளர் தோழர் இசக்கி ஆடும் பெருமாள், இராயகிரி செயலாளர் தோழர் தா. சொக்கையாப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரெ. இராசு, பொதுக்குழு உறுப்பினர் தோழர் மு. தமிழ்மணி, தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, இராயகிரி துணைச் செயலாளர் தோழர் இசக்கி, மகளிர் ஆயம் பொறுப்பாளர் தோழர் மு. துரைச்சி உள்ளிட்டோர் உரையாற்றினர்.

கூட்டத்தின் நிறைவில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புரையாற்றினார். தமது பேச்சில், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அமைந்துள்ள தேர்தல் அரசியல் கட்சிகளின் கொள்கைகளற்ற கூட்டணி குறித்தும், தமிழ்நாட்டின் உரிமைச் சிக்கல்களான காவிரி உரிமை - முல்லைப் பெரியாறு அணை உரிமை - செண்பகவல்லி அணை உரிமை, மீனவர் சிக்கல், கச்சத்தீவு மீட்பு உள்ளிட்ட சிக்கல்களை தேர்தல் கட்சிகளால் தீர்க்க முடியவில்லை என்றும், தமிழ்நாட்டு அரசிற்கு இறையாண்மை அதிகாரம் இருந்தால் மட்டுமே இச்சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. பாண்டியன் நன்றி கூறினார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்



பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.