ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் கைது! 03.10.2016

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் கைது! 03.10.2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள இந்திய அரசைக் கண்டித்து, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்து - ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களை தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்தனர்.சென்னை


சென்னை தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகில், இன்று (03.10.2016) மாலை, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி தலைமையில் ஒன்றுதிரண்ட தோழர்கள், இந்திய அரசுக்கு எதிராக ஆவேச முழக்கங்களை எழுப்பியவாறு, நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்தனர். தமிழ்த் தேச மக்கள் கட்சித் தோழர் புரட்சி நம்பி, இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், தகவல்தொழில்நுட்பத் தொழிலாளர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் பரிமளா, தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி உள்ளிட்ட தோழர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
குடந்தை
தஞ்சை மாவட்டம் - குடந்தை - உச்சிப்பிள்ளையார் கோயில் அருகில், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்து, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழன், தோழர்கள் முரளி, செழியன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.தஞ்சை
தஞ்சையில், தொடர்வண்டி நிலையம் முன்பு, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்து, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அய்யனாவரம் சி. முருகேசன், தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் தஞ்சை மேற்கு மாவட்டச் செயலாளர் திரு. அலெக்சாண்டர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு தலைமையில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா.சு. முனியாண்டி, வழக்கறிஞர் கரிகாலன் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்று, நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தி பிரிவு.
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.