ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழர் ஒத்துழையாமை இயக்கம் . . .தருமபுரியில் குறியீட்டுச்சொற்றொடர் அறிமுகம்! #TamilsBoycottGovtOfIndia

தமிழர் ஒத்துழையாமை இயக்கம் . . .தருமபுரியில் குறியீட்டுச்சொற்றொடர் அறிமுகம்! #TamilsBoycottGovtOfIndia


காவிரிச் சிக்கல், முல்லைப் பெரியாற்றுச் சிக்கல், பாலாறு, அணுஉலைத் திணிப்பு, ஏறுதழுவல் மறுப்பு என தொடர்ந்து தமிழினத்திற்கு எதிராக இனப்பாகுபாட்டுடன் செயல்பட்டு வரும் இந்திய அரசுக்கு எதிராக, காவிரி உரிமை மீட்புக் குழுவும் தமிழ்த்தேசியப் பேரியக்கமும் அறிவித்துள்ள “தமிழர் ஒத்துழையாமை இயக்க”த்தை, சமூக வலைத்தளங்களில் ஒருங்கிணைத்து நடத்திச் செல்ல, குறியீட்டுச் சொற்றொடர் (HashTag) அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

#TamilsBoycottGovtOfIndia என்ற இந்த குறியீட்டுச் சொற்றொடரை, இன்று (23.10.2016), தருமபுரியில் நடைபெற்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இணையக்குழுக் கூட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளரும் தமிழக உழவர் முன்னணி தலைமை ஆலோசகருமான தோழர் கி. வெங்கட்ராமன் அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.

பேரியக்கத்தின் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்து, இணையக்குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் க. அருணபாரதி, தர்மபுரி செயலாளர் தோழர் விசயன், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் ஓசூர் ப. செம்பரிதி, தோழர் பெண்ணாடம் கனகசபை, தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.

தமிழ் மக்களும், தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் #TamilsBoycottGovtOfIndia என்ற இந்தக் குறியீட்டுச் சொற்றொடரைப் பயன்படுத்தி, இந்திய அரசுக்கு நம் வலிமையான எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டுமென, தமிழ்த்தேசியப் பேரியக்கம் தோழமையுடன் அழைக்கிறது..!

தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
பேச: 7667077075, 9047162164

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.