ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

நாளை (16.12.2016)... திருச்சியில்... தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடத்தும் மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல்!

நாளை (16.12.2016)... திருச்சியில்... தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடத்தும் மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல்!

திருச்சியில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் நாளை (16.12.2016) மாலை, மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகின்றது.

நாளை மாலை 5.30 மணியளவில், திருச்சி - தொடர்வண்டி சந்திப்பு நிலையம் அருகிலுள்ள இராசா உணவகத்தில் (ஹோட்டல் ராஜா) நடைபெறும் இந்நிகழ்வுக்கு, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் பாவலர் நா. இராசாரகுநாதன் தலைமையேற்கிறார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் நினைவேந்தல் உரை நிகழ்த்துகிறார்.

முன்னதாக, மாணவர் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. “மாற்றத்தை விரும்பிய மக்கள் பாவலன்” என்ற தலைப்பில் மாணவர் கி.மா. நிலவனும், “பாட்டைக் கருவியாக்கிய படைப்பாளன்” என்ற தலைப்பில் மாணவி மெய் கீர்த்தியும், “ஒடுக்குமுறைகளை எதிர்த்தப் போராளி” என்ற தலைப்பில் மாணவி மு. செந்தமிழ்ச்செல்வியும் கருத்துரை வழங்குகின்றனர். பேராசிரியர் மகிழெந்தி பாவீச்சு நிகழ்த்துகிறார்.

இலக்கியத் திறனாய்வாளர் தோழர் வீ.ந. சோ, தமிழர் தேசிய முன்னணி துணைத் தலைவர் வழக்கறிஞர் த. பானுமதி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் தோழர் நா. வைகறை, திரு. தமிழாதன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), தமிழ்நாடு தமிழ்வழிப்பள்ளி நிர்வாகிகள் சங்கத் தலைவர் திரு. அ.மு. முஸ்தபா கமால், பாவாணர் தமிழியக்க அமைப்பாளர் முனைவர் பி. தமிழகன், ஜமால் முகமது கல்லூரி தமிழியல் துறை பேராசிரியர் மு. சாதிக் பாட்சா, சமூகச் சிந்தனை உயிர்ப்பியக்கம் அமைப்பாளர் திரு. எம். செல்வராஜ், தமிழ்த்தேசியப் பேரியக்கத் திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன் ஆகியோர் நினைவேந்தல் உரை நிகழ்த்துகின்றனர்.
நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், இலக்கிய ஆர்வலர்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

செய்தித் தொடர்பகம்,
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை.

பேச: 9841604017, 7667077075

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.