ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

நாளை (17.12.2016) தஞ்சையில் நடைபெறும்..காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் !

நாளை (17.12.2016) தஞ்சையில் நடைபெறும்..காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் !


காவிரிப் பாசன உழவர் அமைப்புகளின் ஆதரவோடு, தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்தப் பொறியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும், “காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம்” , தஞ்சையில் நடைபெறுகின்றது.

தஞ்சை - நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள காவிரித் திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை வரும் நடைபெறும் இந்நிகழ்வில், மீத்தேன் எதிர்ப்புப் போராளிகளுக்குப் பாராட்டும், காவிரிப் படுகையைப் பாதுகாத்திட செயல் திட்டங்கள் வகுக்கும் கருத்தரங்கும் நடைபெறுகின்றது.

த.நா.பொ.ப.து. மூத்தப் பொறியாளர் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் பொறிஞர். எம்.பி. துரைராஜ் வரவேற்புரையாற்றுகிறார். தமிழ்நாடு பொதுப்பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளர் திரு. கி. மனுராஜ் அறிமுகவுரையாற்றுகிறார். த.நா.பொ.ப.து. மூத்தப் பொறியாளர் சங்க மாநிலச் செயலாளர் பொறிஞர் அ. வீரப்பன் நோக்கவுரையாற்றுகிறார்.

இதனையடுத்து, மீத்தேன் எதிர்ப்புப் போராளிகள் - மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், ஒருங்கிணைப்பாளர்கள் பொறிஞர் கோ. திருநாவுக்கரசு, மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன் ஆகியோர் பாராட்டு பெறுகின்றனர்.

இதனையடுத்து நடைபெறும் கருத்தரங்கில், பேராசிரியர் த. செயராமன், மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், பாவலர் நா. இராசாரகுநாதன், திரு. எம். சேரன், திரு. காவிரி மணிமொழியன், திரு. காவிரி வெ. தனபாலன், திரு. சுவாமிமலை சுந்தர விமலநாதன், திரு. அய்யாக்கண்ணு, பொறிஞர் சா. காந்தி, பொறிஞர் இரா. பரந்தாமன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகின்றனர்.

நிறைவில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ. மணியரசன், “இனி.. என்ன செய்யப் போகிறோம்?” என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

பொறிஞர் அ. வீரப்பன் நிகழ்வைத் தொகுத்து வழங்கி, தீர்மானங்களை முன்மொழிகிறார்.

நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், உழவர் பெருமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

தொடர்புக்கு : 99444 95662, 94444 04774, 044-65879289

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.