ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஆவடியில் “தமிழ் இலக்கியக் குழு” முப்பெரும் விழா ! பெ. மணியரசன் சிறப்புரை!

ஆவடியில் “தமிழ் இலக்கியக் குழு” முப்பெரும் விழா ! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புரை!


சென்னையைத் தாக்கிய புயல் காரணமாக மேற்கண்ட நிகழ்ச்சி 18.12.2016 அன்று நடைபெறாது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்படுகின்றது. இதே நிகழ்வு, 25.12.2016 அன்று தள்ளி வைக்கப்படுவதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.



புரட்சிப்பாவலர் பாரதிதாசன் 125ஆவது பிறந்தநாள் - தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு - மொழிவழி மாநிலமாகத் “தமிழ்நாடு” உருவானதன் 60ஆம் ஆண்டு ஆகியவற்றை முன்னிட்டு, ஆவடியில், வரும் 18.12.2016 அன்று, “தமிழ் இலக்கியக் குழு” சார்பில் “முப்பெரும் விழா” கொண்டாடப்படுகிறது.

ஆவடி இராமரத்னா திரையரங்கம் அருகிலுள்ள பாரதிதாசன் திருமண அரங்கில் மாலை 4 மணியளவில் தொடங்கி நடைபெறும் இவ்விழாவிற்கு, தமிழ் இலக்கியக் குழு நிறுவனர் திருமதி. இல. விசயகுமாரி தலைமை தாங்குகிறார்.

கோசைநகரான் கயிலாய வாத்திய இசைக் குழுவினரின் “தமிழர் மரபு இசை” நிகழ்வோடு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. மாணாக்கர் மற்றும் இளையோர் அரங்கில், செல்வன் இரா. விசுவா அவர்களின் “தமிழர் ஓகக்கலை” நிகழ்வும், தமிழ்நாடு சிலம்பம் தற்காப்புக் கலைக் குழுவினரின் ”தமிழர் வீரக்கலை” நிகழ்வும், “கவியருவி” சமாரியா அவர்களின் தித்திக்கும் செந்தேன் மெல்லிசைக் குழுவினரின் ஆடல் நிகழ்வும், “எழுச்சிப் பாடகி” குடந்தை இரத்தினா அவர்களின் இன எழுச்சிப் பாடல்கள் நிகழ்வும் நடைபெறுகின்றன.
தமிழ்த்தேசியம் சார்ந்த நூல்கள், இயற்கை வேளாண் பொருட்கள், மூலிகைகள், தமிழ் சொற்கள் பொறிந்த ஆயத்த ஆடைகள் ஆகியவற்றின் கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெறுகின்றது.

முன்னதாக, தமிழ்ச் சான்றோர்களின் படத்திறப்பும் - மாலை அணிவிப்பும், விளக்கேற்றுதல் மற்றும் அக வணக்கம் செலுத்துதல் ஆகியவை நடக்கின்றன.

அதன் பின்னர் நடைபெறும் நிறைவரங்கில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புரை நிகழ்த்துகிறார். தோழர்கள் சு. ஆதிரை, இரா. பிரீத்தி ஆகியோர் நிகழ்வைத் தொகுத்து வழங்குகின்றனர். திரு. து. தனலட்சுமி நன்றி கூறுகிறார்.

நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும் பொது மக்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கிறோம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.