ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மன்னார்குடியில் ... இயற்கைக் காப்புப் போராளி நம்மாழ்வார் நினைவேந்தல்!

மன்னார்குடியில் ... இயற்கைக் காப்புப் போராளி நம்மாழ்வார் நினைவேந்தல்!
இயற்கைக் காப்புப் போராளி கோ. நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், மன்னார்குடியில் 31.12.2016 அன்று நடைபெறுகின்றது.

வரும் காரிக்கிழமையன்று மாலை 5 மணியளவில், மன்னார்குடி நகராட்சி அலுவலகம் அருகிலுள்ள நகர அரங்கில் (சிட்டி ஹால்) நடைபெறும் இந்நிகழ்வில், கருத்தரங்கமும் பாரம்பரிய விதைக் கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெறுகின்றது.

“நம்மாழ்வாரும் வேளாண்மை அரசியலும்” என்ற தலைப்பில், தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன் அவர்களும், “இயற்கை வேளாண்மை ஏன்? எப்படி?” என்ற தலைப்பில், இயற்கை வேளாண்மை உழவர் திரு. பழ. ஆறுமுகம் அவர்களும், “நம்மாழ்வாரும் தமிழக சூழல் பாதுகாப்புப் போராட்டமும்” என்ற தலைப்பில், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் முகிலன் அவர்களும் உரையாற்றுகின்றனர்.

பாரம்பரிய காய்கறி விதைகளை திரு. முசிறி யோகநாதன் அவர்களும், நாட்டுப்பருத்தியை திரு. சுவாமிநாதன் அவர்களும் கண்காட்சியில் காட்சிப்படுத்துகின்றனர்.

இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், சூழலியல் ஆர்வலர்களும், பொது மக்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

தொடர்புக்கு: 94435 85675, 94438 95710.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

இணையம்:www.kaveriurimai.com
பேச: 94432 74002, 76670 77075
முகநூல்: www.fb.com/kaveriurimai


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.