ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம்!

மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம்!

1938 – 1965ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த தமிழ் மொழிக்காப்புப் போரில், நஞ்சுண்டும், தீக்குளித்தும் மடிந்த ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் மொழிப்போர் ஈகியர் நாளான இன்று (25.01.2017), தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வுகள் தமிழகமெங்கும் நடைபெற்றன.

சென்னை
  தமிழகத் தலைநகர் சென்னை வள்ளலார் நகர் – மூலக்கொத்தளம் இடுகாட்டில் உள்ள மொழிப்போர் ஈகியர்கள் நடராசன் – தாளமுத்து – பேராசிரியர் தர்மாம்பாள் ஆகியோரது நினைவிடங்களில், காலை 10.30 மணியளவில், தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பனார் தலைமையில், பேரணியாகச் சென்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தமிழுரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் தோழர் காஞ்சி அமுதன் வீரவணக்க முழக்கங்களை எழுப்பினார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.நல். ஆறுமுகம், தோழர் இரா. இளங்குமரன், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி, தமிழக இளைஞர் முன்னணி சென்னைத் தலைவர் தோழர் வெற்றித்தமிழன், தென்சென்னை த.தே.பே. செயலாளர் தோழர் மு. கவியரசன் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்களும், பல்வேறு அமைப்பின் பொறுப்பாளர்களும் பேரணியில் பங்கேற்றனர்.
சிதம்பரம்

 கடலூர் மாவட்டம் - சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள மொழிப் போர் மாணவ ஈகி இராசேந்திரன் சிலைக்கு தமிழக மாணவர் முன்னணி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வுக்கு தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா தலைமை தாங்கினார். தமிழ்த்தேசியப் பேரியக்க சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் எல்லாளன், ஈகி இராசேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தார். மூத்த தோழர் ம.கோ. தேவராசன், தோழர்கள் சரண், கார்த்திகேயன் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.

திருச்சி
 திருச்சியில், தென்னூர் உய்யகொண்டான் ஆற்றங்கரையில் அமைந்துள்ள மொழிப்போர் ஈகியர் கீழப்பழூர் சின்னசாமி - விராலிமலை சண்முகம் ஆகியோர் நினைவிடங்களிலும், காவிரிக்கரையில் அமைந்துள்ள சின்னசாமி சிலைக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் திருச்சிக் கிளை சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்விற்கு மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன் தலைமையேற்றார். தமிழறிஞர்கள் வீ.ந.சோ, பழ. தமிழாளன், ஐயா. மனுவேல், தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.பா. சின்னத்துரை, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் பாவலர் நா. இராசாரகுநாதன், மு.வ. இரத்தினம், இராமராசு, வெள்ளம்மாள், தி.மா. சரவணன், இனியன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

செங்கிப்பட்டி
 தஞ்சை மாவட்டம் – பூதலூர் ஒன்றியம், செங்கிப்பட்டியில் இன்று காலை, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு தலைமையில், மொழிப்போர் ஈகியர் படங்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. ஒன்றியச் செயலாளர் தோழர் ஆ. தேவதாசு, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் பி. தெட்சிணாமூர்த்தி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

முருகன்குடி
 கடலூர் மாவட்டம், பெண்ணாடம் வட்டம் – முருகன்குடியில் நடைபெற்ற மொழிப் போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வுக்கு, பேரியக்கக் கிளைச் செயலாளர் தோழர் அரா. கனகசபை தலைமைத் தாங்கினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் முருகன் அவர்கள் மொழிப்போர் குறித்து விளக்கிப் பேசினார். இந்நிகழ்வில் தமிழக இளைஞர் முன்னணி நடுவண்குழு உறுப்பினர் தோழர் சி.பிரகாசு, தமிழக மாணவர் முன்னணி நடுவண்குழு உறுப்பினர் மா.மணிமாறன், தமிழக இளைஞர் முன்னணி தோழர்கள் காமராசு, மு.பொன்மணிகண்டன், சி.பிரபாகரன், தி.சின்னமணி, திருவள்ளுவர் தமிழர் மன்றத் தோழர் சு.சரத்குமார், மகளிர் ஆயம் சார்பில் நடுவண்குழு உறுப்பினர் மு.வித்யா, பி.சாந்தலெட்சுமி, ம.கனிமொழி, கா.அனிதா, ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தருமபுரி
 தருமபுரி, இந்திய அரசுத் தொலைப்பேசி இணைப்பகம் அருகில் நடைபெற்ற மொழிப் போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வுக்கு, பேரியக்க செயலாளர் தோழர் க. விசயன் தலைமை தாங்கினார். பேரியக்கத் தோழர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.