ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஏறுதழுவலுக்குத் தடை விதித்த - இந்திய அரசைக் கண்டித்து சிதம்பரத்தில் இந்தியத் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் கைது !

ஏறுதழுவலுக்குத் தடை விதித்த - இந்திய அரசைக் கண்டித்து சிதம்பரத்தில் இந்தியத் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் கைது !
தமிழர்களின் வீர விளையாட்டான ஏறு தழுவலுக்குத் தடை விதித்துள்ள இந்திய அரசைக் கண்டித்து, சிதம்பரத்தில் இந்தியத் தலைமை அஞ்சலகத்தை இன்று காலை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.

மதுரை அலங்காநல்லூரில் நேற்றிலிருந்து (16.01.2017), ஏறுதழுவல் உரிமைக்காக அறவழியில் போராடி வந்த மாணவர்களையும் இளைஞர்களையும், தமிழ்நாடு அரசுக் காவல்துறை இன்று (17.01.2017) காலை, அராஜகமாகச் சென்று கைது செய்துள்ளதைக் கண்டித்து, தமிழ்நாடெங்கும் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன.
மதுரையில் மாணவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், உடனடியாக இந்திய அரசு ஏறுதழுவல் நடத்த அனுமதிக்கக் கோரியும், சிதம்பரம் வடக்குத் தெருவில் உள்ள இந்திய அரசின் தலைமையகத்தை மாணவர்களும் இளைஞர்களும் இன்று காலை முற்றுகையிட்டனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்க நகரச் செயலாளர் தோழர் எல்லாளன், தமிழக இளைஞர் முன்னணித் துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே. சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து தமிழர்களை - தமிழ்ப் பண்பாட்டை அழிக்கத்துடிக்கும் இந்திய அரசைப் புறக்கணிக்கும் போராட்டத்தை முன்னெடுங்கள்!

இந்திய அரசைப் புறக்கணிப்போம்!

#TamilsBoycottGovtOfIndia


பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/TamilsBoycottGovtOfIndia

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.