ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

நந்தினி கொலையைக் கண்டித்து பெண்ணாடத்தில் ஆர்ப்பாட்டம்!

 நந்தினி கொலையைக் கண்டித்து பெண்ணாடத்தில் ஆர்ப்பாட்டம்!
அரியலூர் மாவட்டம் - சிறுகடம்பூரில் இந்து முன்னணி மணிகண்டன் கும்பலால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு சகோதரி  நந்தினி கொடூரமாகக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, 01.03.2017 அன்று பெண்ணாடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெண்ணாடம் பழைய பேருந்து நிலைத்தில் தமிழக இளைஞர் முன்னணி நடத்திய இவ் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி. பிரகாசு தலைமை தாங்கினார்.

தமிழக மாணவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் மா.மணிமாறன், தமிழக இளைஞர் முன்னணி தோழர் தி. ஞானப்பிரகாசம், தமிழக உழவர் முன்னணி பொதுக்குழு உறுப்பினர் தோழர் மு. இராமகிருட்டிணன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் அரா. கனகசபை ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழக மாணவர் முன்னணி தோழர் தி. சின்னமணி நன்றியுரை கூறினார்.

நிகழ்வில் தமிழ்த் தேசியப் பேரியக்க தோழர்களும், தமிழக இளைஞர் முன்னணி தோழர்களும் திரளாகப் பங்கேற்றனர்.

செய்தித் தொடர்பகம்,
தமிழக இளைஞர் முன்னணி. 

பேச: 7667077075
இணையம்: http://tnyouthfront.blogspot.in/
 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.